ஆறுதல்

மரண அறிவித்தல்

கனகசபை நல்லையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கனகசபை நல்லையா

ஓய்வுபெற்ற காவற்துறை உத்தியோகத்தர்

வயது 855 ஆகஸ்ட், 1933 – 9 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
அச்சுவேலி
வாழ்ந்த இடம்
அச்சுவேலி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை நல்லையா அவர்கள் 09-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

பாஸ்கரன்(லண்டன்), மாலினி(லண்டன்), பவானி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜானகி(அவுஸ்திரேலியா), ஏகாம்பரம்(லண்டன்), பிரதாபன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாலசுப்பிரமணியம்(இலங்கை), காலஞ்சென்ற கணேசமூர்த்தி, சிவஞானம்(லண்டன்), வள்ளிநாயகி(லண்டன்), சுந்தரமூர்த்தி(லண்டன்), அருளானந்தம்(லண்டன்) ஆகியோரின் அன்பு
மைத்துனரும்,

காருண்யா, ஸ்ரீநிதி, சாம்பவி, அஞ்ஞனா, மேதா, மதுரா, கணாதிபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோப்பு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும், புகையிலைத் தோட்டம் மரக்கறித் தோட்டம், நெல் வயல்கள், பயன்தரும் மரங்கள் என்பவற்றுடன் படித்த சமுதாயத்தைக் கொண்டதுமான அச்சுவேலியில் 05-Aug-1933 இல் கனகசபை இராசம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் நல்லையா அவர்கள் பொன்னையா, தங்கம்மா ஆகிய சகோதரர்களுடன் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.

வாலிபனானதும் செல்லத்துரை கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அழகு மகள் தவமணி அவர்களை திருமணம் முடித்து இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து,

முழுக் கதையையும் வாசிக்க

பாஸ்கரன், மாலினி, பவானி எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்றெடுத்து பாசமாகவும் பண்பாகவும் பாதுகாத்து வளர்த்தார்.

இவர் கடின உழைப்பாளியாக திகழ்ந்ததுடன் காவற்துறை உத்தியோகத்தராக இருந்து அற்பணிப்புடன் கடமை புரிந்து ஓய்வு நிலை அடைந்தார்.

வாழ்வில் நற் பண்பும் ஒழுக்கமும் நிறைந்த இவர். பாசமாக உறவினர்களுடன் பேசி மகிழ்வதுடன் அனைவருக்கும் உதவிடும் எண்ணம் கொண்டவர்.

இவ்வாறு மனைவி பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 09.04.2019 இல் 85 வயதில் அச்சுவேலியில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

"அச்சுவேலி தந்த
அன்புப் புதல்வனே
அணைத்து நின்று
அறிவூட்டிய உயிரே
அகிலத்தில் உயர
பாதை காட்டி
ஆகாயம் தொட்ட பின்
சொல்லாமல் பிரிந்ததேன் "

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.