மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணவதிபிள்ளை அமிர்தவதனி
வயது 6328 ஜூலை, 1956 – 1 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- குப்பிளான்
- வாழ்ந்த இடம்
- குப்பிளான், தரணிக்குளம், பூவரசங்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், குப்பிளான், வவுனியா தரணிக்குளம், பூவரசங்குளம் புலவூநகர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணவதிபிள்ளை அமிர்தவதனி அவர்கள் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அமிர்தபிள்ளை, தவமணி(நெதர்லாந்து) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருள்வாசகம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணவதிபிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
இராஜகுரு(கனடா), லோகாம்பிகை(இலங்கை), அமிர்தநாதன்(இலங்கை), காலஞ்சென்ற கமலநாதன், யசோத(இங்கிலாந்து), வின்ஷன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சரோஜினி(கனடா), மஞ்சுளா(இலங்கை), காலஞ்சென்ற சிறீநாகேஸ்வரன்(இலங்கை), இரஞ்சிதமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அமிர்தமணி(இலங்கை), அமிர்தஇராசவதனி(நெதர்லாந்து), தவலிங்கம்(டென்மார்க்), அமிர்தரூபினி(கனடா), தவக்குமார்(சுவிஸ்), அமிர்தகௌரி(சுவிஸ்), அமிர்தராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம், இராசரத்தினம்(நெதர்லாந்து), பராசக்தி(டென்மார்க்), காலஞ்சென்ற திருநாவுக்கரசு(கனடா), சுதா(சுவிஸ்), குணபாலன்(சுவிஸ்), வினோ(கனடா), காலஞ்சென்ற வன்னியசிங்கம், சோமசுந்தரம், அன்னபூரணம், காலஞ்சென்ற வீரசிங்கம், நாகேஸ்வரி, புஸ்பமலர், பரமேஸ்வரி, காலஞ்சென்ற அருந்தவமலர், யோகராசா, ஆனந்தராஜா, கனகராசா, கனிகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்.
சாருக்கா, சாருத்தியன், துர்கா(கனடா), சாய்பிரகாஷ், சாயிசன்(இலங்கை), சிந்துஜா, அனுசிஜா(இலங்கை), அனித்து, அக்ஷியன்(இங்கிலாந்து), அஜய், அக்ஷயா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-09-2019 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் புலவூநகர் பூவரசங்குளம் வவுனியா பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசை யாழ்ப்பாணத்தின் குப்பிளானில் 28/JUL/1956 இல் திரு.திருமதி அமிர்தபிள்ளை தவமணி தம்பதிகளின் அன்பு மகள் அமிர்தவதனி அவர்கள் அமிர்தமணி, அமிர்தஇராசவதனி, தவலிங்கம், அமிர்தரூபினி, தவக்குமார், அமிர்தகௌரி, அமிர்தராணி போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி அருள்வாசகம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகன் கணவதிபிள்ளை என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக இராஜகுரு, லோகாம்பிகை, அமிர்தநாதன், கமலநாதன், யசோதா, வின்ஷன் எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று பாதுகாத்து வளர்த்து சரோஜினி, மஞ்சுளா, சிறீநாகேஸ்வரன், இரஞ்சிதமலர் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து சாருக்கா, சாருத்தியன், துர்கா, சாய்பிரகாஷ், சாயிசன், சிந்துஜா, அனுசிஜா, அனித்து, அக்ஷியன், அஜய் ,அக்ஷயா எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், பழைய கதைகள் சொல்வதில் வல்லவராகவும்,அன்பு பாசம் நிறைந்து கானப்படும் அழகிய உறவாக விளங்கியதுடன். அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு வாழ்ந்தார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 01.09.2019 இல் 63 வயதில் வவுனியாவில் உள்ள பூவரசங்குளத்தில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
விசித்திர உறவே விடியலின் அழகிய நிலவே
பவித்திர உள்ளமே பகை அறியா உயிரே
நினைத்ததைச் சாதித்து நிம்மதி அடைந்து
சாய்ந்தீர் மண்ணில் சரித்திரமாய்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

