ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு22 அக்டோபர், 1942
இறப்பு19 ஜூன், 2018
கணபதிப்பிள்ளை கந்தசாமி அவர்களின் படம்

கணபதிப்பிள்ளை கந்தசாமி

வயது 75, ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர்

பிறந்த இடம்
வடமராட்சி
வாழ்ந்த இடம்
திருகோணமலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வடமராட்சி வதிரியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

தாய் தந்தைக்கு அன்பான பிள்ளையாய்
தாரத்திற்கு தக்க துணைவனாய்
தன்நலம் கருதா பண்பாளனாய் வாழ்ந்திருந்தாய்

ஆலமரம் போல அனைவருக்கும் நிழல் தந்தாய்
நாலும் தெரிந்தவனாய் நல்மனிதனாய் வாழ்ந்திருந்தாய்
காலமெல்லாம் எமைக்காத்து களித்திருப்பாய் என்றிருக்க
கண்ணிமைக்கும் நேரமதில் காற்றோடு காற்றானாய்

எம்முயிரை உன்னில் தொலைத்துவிட்டு
உன் இதயம் சுமந்து நடக்கின்றோம் கண்ணீரோடு
ஓராண்டென்ன ஓராயிரம் ஆண்டானாலும்
எம் மனதை விட்டு அழியாது உன் நினைவும் நின்முகமும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்

அன்னாரின் முதலாம் ஆண்டு திவசக்கிரியைகள் 08-07-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்வில் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் அவரது ஆத்மா சாந்திக்கான பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

என்னும் குறளுக்கு ஒப்பாக வாழ்ந்தவர் தான் அமரர் கந்தசாமி அவர்கள். சிவபூமியென போற்றப்படுகின்ற ஈழத்திரு நாட்டின் உச்சித் திலகமாய் விளங்குவது யாழ்ப்பாணம் என்னும் திருநகர். இத்திருநகரின் வடபால் அமைந்துள்ள வடமராட்சி வதிரியில் கணபதிப்பிள்ளை பருவதம் தம்பதிகளின் மகனாக கந்தசாமி அவர்கள் 22-10-1942 ஆம் ஆண்டின் இவ் அவனியில் உதித்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

பரமேஸ்வரி, இரத்தினசிங்கம், கனகசிங்கம், பாலசிங்கம், சிவபாதசுந்தரம், உதயகுமார் போன்ற உடன்பிறப்புகளுடன் மெல்ல மெல்ல வளர்ந்து வந்தார். அத்துடன் யாழ். நெல்லியடி மேதடிஸ்த மிசன் பாடசலையில் ஆரம்பக் கல்வியை கற்று, யாழ். நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் தனது கனிஷ்ட நிலைக் கல்வியையும் கற்று முடித்தார். கல்வியின் மீதும் ஆசிரிய பணியின் மீதும் கொண்ட மிகுந்த ஆர்வத்தால் நு/ ஸ்ரத்ஸ்பீ தோட்டப் பாடசாலையில் உதவி ஆசிரியராக பணியேற்றார். சிறப்பான சேவையாலும் அன்பான நடத்தையாலும் எல்லோராலும் சின்ன சேர் என அன்பாக அழைக்கப்பட்டார்.

வளர்ந்து பெரியவரானதும் தன் வாழ்க்கையின் துணையாக இராசேஸ்வரியை(பபா) கைப்பிடித்தார். பின்பு கந்தசாமி அவர்கள் திருகோணமலை சென்ஜோன்ஸ் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றியதோடு ஆசிரிய சேவையை திறம்பட செய்தமையின் பொருட்டு ஆசிரிய ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஏறக்குறைய 38 ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றிய பெருமை இவருக்குண்டு.

இவ்வாறு இவ் அவனியில் பெருமைக்குரியவராய் வாழ்ந்த இவர் 19-06-2018 இல் இவ்வுலக வாழ்வை நீத்து பேருலக பெருவாழ்வைப் பெற்றார்.

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ! யாவர்க்கும் ஒரே விதி!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.