ஆறுதல்

மரண அறிவித்தல்

கணபதிப்பிள்ளை நடராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கணபதிப்பிள்ளை நடராஜா

வைத்திய கலாநிதி, ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரி

வயது 8021 ஆகஸ்ட், 1938 – 20 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
நல்லூர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செட்டித்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. கணபதிப்பிள்ளை நடராஜா அவர்கள் 20-04-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோன்மணி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜனனி(பிரியா- கனடா), ஹம்சா(ஆசிரியை நெல்லியடி மத்திய கல்லூரி), சுகன்யா(கனடா), கவிதா(கனடா), விஸ்ணுகாந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வரதலக்சுமி அவர்களின் அன்புச் சகோதரரும்,

புஸ்பநாதன்(கனடா), மகிந்தன்(பனை அபிவிருத்தி சபை), கிருபாகரன்(கனடா), நாவேந்தன்(கனடா), நிரோஜினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, பசுபதி மற்றும் தம்பிஐயா, தங்கம்மா(மேரி கிறிஸ்ரின்), சுந்தரேஸ்வரன், செல்வராஜா, கணபதிப்பிள்ளை பரமநாதன், காலஞ்சென்ற அருந்தவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செளமியா, அபிலாஷ், கஜானி, அபிநயா, ஜதுசன், கஜீபன் பிரணன், சேயோன், சேரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-04-2019 செவ்வாய்க்கிழமை மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

மனதை உறுத்தும் மருத்துவரின் மரணம்!

இந்துமாக்கடலின் முத்தெனத் திகழும் நெடுந்தீவு தந்த அற்புத வைத்தியக் கலாநிதி கணபதிப்பிள்ளை நடராஜா அவர்களை நாம் இன்று தொலைத்து நிற்கின்றோம். மக்களின் ஆரோக்கியத்திற்கான அடிநாதமாக விளங்கும் வைத்தியத்துறையில் தன் வாழ்நாளை மிகுந்த அர்ப்பணிப்புடன் அர்ப்பணித்து மக்களை அன்பாலும் அரவணைப்பாலும் கவர்ந்த வைத்திய அதிகாரி நடராஜா அவர்களின் மரணம் மிகுந்த துயரை ஏற்படுத்தியுள்ளது.

முழுக் கதையையும் வாசிக்க

மருத்துவர்கள் சமூகத்துக்குத் தொண்டு செய்கிற உன்னதமான பணியில் இருப்பவர்கள்.மக்களின் நம்பிக்கையை மருத்துவர்கள் காப்பாற்றவேண்டும் . என்கின்ற மகத்தான தாரகமந்திரத்தோடு தான் பணிபுரிந்த அத்தனை மாவட்டங்களிலும் சுகாதார தேவைகளை சிறப்பாக்கிய உத்தமர் டாக்டர் நடராஜா அவர்கள். பணம் பண்ணும் தொழிலாகவும்,அந்தஸ்த்துச் சேர்க்கும் தொழிலாகவும் தன் புனிதமான மருத்துவத் தொழிலை என்றும் இவர் எண்ணியவரல்ல. ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரராக இருந்தாலும் சரி... அவர்களை பாரபட்சமில்லாமல் நடத்த வேண்டும். எல்லாமே உயிர் என்று நினைக்க வேண்டும். நோயாளியை மதிக்க வேண்டும், நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையே உள்ள உறவு புனிதமானதாயிருக்கவேண்டும் என்கின்ற அறக்கோட்ப்பாடுகளோடு என்றும் வாழ்ந்தவர். தன்னைச்சுற்றி வாழ்ந்தவர்களையும் அவ்வாறு வாழ வழி செய்தவர்.மிகச் சிறந்த ஆன்மீகவாதி.நல்லூர் முருகனில் அதிக நாட்டமுள்ளவர். இன்னல்பட்ட தமிழருக்காய் இயன்றவரை உதவியவர். மக்களின் ஆரோக்கியத்திற்கான அடிநாதமாக விளங்கும் வைத்தியத்துறையில் மகத்தான சேவையாற்றி ஓய்ந்த மாமனிதராகிய நடராஜா அவர்கள் "பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்" என்கின்ற வள்ளுவரின் வாய்மொழிக்கான சாட்சி.

வைத்தியத் தொழில் எல்லோருக்குமே கைவந்துவிடாது. அதை வரப்பிரசாதமாக நினைத்து, வந்த நோயாளிகள் அனைவரையும் வாழவைக்கப் பாடுபட்ட நெடுந்தீவு அன்னை தந்த மூத்த மருத்துவருக்கு எம் ஆர்மார்த்த அஞ்சலிகள்!!

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.