நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை புஸ்பராணி
வயது 5030 மார்ச், 1947 – 14 மார்ச், 1998
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- மல்லாவி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி(4ம் யூனிட்) திருநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை புஸ்பராணி அவர்களின் 23ம் ஆண்டு நினைவஞ்சலியும், 74வது பிறந்த தினமும்
காலமெல்லாம் எம்முடன் நீங்கள் வாழ்வீர்கள் என்று
காத்திருந்தோம் அம்மா..
காலன் உனை அழைத்ததனால் இன்றும்
கலங்குகின்றோம் அம்மா...!
எமை கண்ணீரில் தவிக்கவிட்டாய் நெஞ்சமெலாம்
துயரையிட்டாய்....!
கானல் நீராய் எம் நினைவைகரைத்துவிட்டாய்;
நீங்கள் எமை விட்டு நெடுந்தூரம் சென்று இருபத்து மூன்றாண்டு - இவ்
ஆண்டு உங்கள் எழுபத்து நான்காவதுஅகவை ஆண்டு..
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எம்தாயே..!
எந்நாளும் உம் பாசம் எமை விட்டுப்போகாதே..!
கொடிய நோயால் எம் குலதெய்வம் உயிர் விட்டு;
நெடிய பயணம் சென்றீர்கள்
எமை விட்டு..
உங்கள் உணர்வும் உதவும்
குணமும் நன்றே எமக்களித்த நற் பண்புகளும்
என்றும் எமக்காய் வழிகாட்டிச்செல்லும்....
நெஞ்சிருக்கும் வரை உங்கள்நினைவிருக்கும்
அந்த நினைவுகளே நாம் வாழும் வரை
நிலைத்திருக்கும்..அம்மா..
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி
உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள்
உற்றார் உறவினர்கள்..
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

