மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை செல்வராசா
இலங்கை தபால் தந்தி ஊழியர்
வயது 7921 ஜனவரி, 1940 – 8 ஜூன், 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 9ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- தையிட்டி, நோர்வே, டென்மார்க்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுத்தீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை தையிட்டி, நோர்வே ஆகிய இடங்களை வதிவிடமாகவும், டென்மார்க்கை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை செல்வராசா அவர்கள் 08-06-2019 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அரியமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெயவரதன்(வரதன்- டென்மார்க்), காலஞ்சென்ற சுரேந்திரன்(சுரேஷ்), கெங்காதரன்(கெங்கா- டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வனிதா(டென்மார்க்), சுவேந்தினி(லண்டன்), ராதிகா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோகம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,
சுதா, றஞ்சி, விஜி, சுபா ஆகியோரின் பாசமிகு தாய் மாமனும்,
பொன்னுச்சாமி(கனடா), காலஞ்சென்ற சிங்கராசா, அருளானந்தம்(இலங்கை), செல்வமலர், புஷ்பமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஈஸ்வர், ஆதவன், அபிராமி, புருஷோத்தன்(கைனு), மஞ்சுபாரதி, பகலவன்(விஷ்னு- டென்மார்க்), சுதர்னா(இலங்கை), சுதன்ஜா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜெய்ஷன், ஜேமி(டென்மார்க்), ஆஷா, அக்சரா(இலங்கை), சித்தார்த்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-06-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை Hernings sygehus kape, Overgade 2, 7400 Herning, Denmark எனும் முகவரியில் கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த புங்குடுதீவு 09ஆம் வட்டாரத்தில் 21/Jan/1940 ஆம் ஆண்டில் திரு.திருமதி கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளுக்கு அன்பு மகனாக திரு.செல்வராசா அவர்கள் யோகம்மா எனும் அன்பு உடன் பிறப்புகளுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் திரு.திருமதி வல்லிபுரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகள் அரியமலர் என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாக வாழ்ந்து ஜெயவரதன், சுரேந்திரன், கெங்காதரன் போன்ற பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து, பெரியவர்களானதும் வனிதா, சுவேந்தினி, ராதிகா போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து தனது கடமையை சிறப்பாகச் செய்து ஈஸ்வர், ஆதவன், அபிராமி, புருஷோத்தன், மஞ்சுபாரதி, பகலவன், சுதர்னா, சுதன்ஜா போன்ற பேரப்பிள்ளைகளுடனும், ஜெய்ஷன், ஜேமி, ஆஷா, அக்சரா, சித்தார்த் எனும் பூட்டப்பிள்ளைகளுடனும் அன்பாக பேசி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இலங்கை தபால் தந்தி ஊழியராக கடமையாற்றியதுடன், இலங்கையின் உள்நாட்டு போர் காரணமாக வடபகுதியுள்ள தீவுப் பிரதேசங்களில் நல்ல பாதுகாப்பு இல்லாத நிலையினாலும் மேலும் போர் இறுக்கமடைய மென்மார்க் சென்று வாழ்ந்து வந்ததுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராக விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 08.06.2019 இல் 79 வயதில் டென்மார்க்கில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"புங்குடுதீவில் உதிர்த்து
......புகழ் பரப்பி
தங்க குணங்கள்
......தனக்குள் கொண்ட
எங்கும் சேவை
........எதிலும் அன்புடன்
இங்கே வாழ்ந்து
......எங்களை விட்டுப் பிரிந்தீரே"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

