மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை சிவகுமாரன்
ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர் - யாழ் போதனா வைத்தியசாலை
வயது 6715 ஜூன், 1951 – 8 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- ஆவரங்கால்
- வாழ்ந்த இடம்
- புலோலி தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், புலோலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவகுமாரன் அவர்கள் 08-04-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(வாதரோக வைத்தியர்), ருக்மணி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷா, சசிகரன்(துபாய்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜீவகன், ஜெனார்த்தனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லாவன்யா, ஹார்ஷாவர்தன், சஜனிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
செல்லத்துரை, சுந்தரேசன்(கனடா), சோமசேகரம், அமிர்தவல்லி(இந்தியா), சுந்தரவல்லி, சவுந்தரவல்லி(பிரான்ஸ்), காலஞ்சென்ற முரளிதரன், வாசுதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும் நெல்வயல்கள், மிளகாய்த்தோட்டம், மரக்கறித் தோட்டங்கள் என செழிப்பு மிகு ஆவரங்காலில் 15-06-1951 இல் வாதரோக வைத்தியரான கணபதிப்பிள்ளை, ருக்மணி தம்பதிகளுக்கு சிரேஸ்ட புதல்வனாய் சிவகுமாரன் அவர்கள் செல்லத்துரை, சுந்தரேசன், சோமசேகரம், அமிர்தவல்லி, சுந்தரவல்லி, சவுந்தரவல்லி, முரளிதரன், வாசுதேவன் ஆகிய சகோதரர்களுடன் இப்பூமியில் அவதரித்தார்.
மேலும் ஆளுமையும் அறிவும் நிறைந்த இவர் வளர்ந்து உயர்நிலை அடைந்து அழகிய வாலிபனானதும் கிருஷ்ணபிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அழகு மகள் கமலேஸ்வரி அவர்களை திருமணம் முடித்து இன்பமாக வாழ்ந்து அனுஷா, சசிகரன் எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்றெடுத்து பாசமாகவும் பண்பாகவும் பாதுகாத்து வளர்த்ததுடன் பெரியவர்களானதும் ஜீவகன், ஜெனார்ந்தனி போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து மாமாவிற்குரிய கடமையையும் செய்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் கடின உழைப்பாளியாக திகழ்ந்ததுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்பார்வையாளராக கடமை புரிந்ததுடன் ஓய்வு நிலை அடைந்தார். வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்த இவர் உதவிடும் வள்ளலாக விளங்கினார்.
இவ்வாறு மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 08-04-2019 இல் 67 வயதில் புலோலி தெற்குகில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
"உயிரில் கலந்த
உயர்ந்த அப்பா
உறக்கம் தொலைத்து
காத்த உயிரே
பாச உறவே
நேச உள்ளமே
பறந்து போனது
ஏன் உறவே "
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

