ஆறுதல்

நன்றி நவிலல்

கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம்

இளைப்பாறிய அதிபர், சமாதான நீதவான்

வயது 8028 ஏப்ரல், 1939 – 12 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
தாவடி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

அன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களிற்கும், எம்முடன் சேர்ந்து துன்பதுயரங்களை பகிர்ந்து கொண்டவர்களிற்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களிற்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களிற்கும், பல நாடுகளில் இருந்தும் நேரடியாக வந்தும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களை தெரிவித்தவர்களிற்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த அழகிய இலங்கைத் தீவில்.தமிழ் பேசும் மக்களும், கல்வி அறிவு கூடிய சமுதாயங்களைக் கொண்ட வடபுலத்தில், A9 வீதி ஊடறுத்துச் செல்லும் அழகிய தென்மராட்சியில் சகல வளங்களைக் கொண்ட சாவகச்சேரியில் 28/APR/1939 இல் திரு.திருமதி கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனாக திரு.சுந்தரலிங்கம் அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் அன்னலக்சுமி, பாக்கியலீலா, பெரியதம்பி, குணராசா, விஜயராசா என்பவர்களின் சகோதரமாக குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி இராசதுரை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகள் மகேஸ்வரி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து நகுலேஸ்வரன்,சுதர்சினி எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்த்து மஞ்சு, சிவகுமார் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து பிரபாங்கன், பிரியங்கா, பவித்திரா, பிருந்தா, பைரவி, நர்த்தனன், ஜனதன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் நன்கு கல்வி கற்று ஆசியராக கடமையாற்றியதுடன்,அதிபராகவும் நற் சேவையாற்றி ஓய்வு பெற்ற இவர் சமாதான நீதவானாகவும் சேவை ஆற்றினார் ஆத்துடன் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 12.08.2019 இல் 80 வயதில் கொக்குவிலில் உள்ள தாவடியில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

”ஆசானே எங்கள் அறிவு ஞானியே
பாசாங்கு இன்றி கடமை ஆற்றி
நாசமாய் போவோரை நற்பாதை காட்டிய
வேசம் போடாத வெள்ளை மனமே
வாசம் வீசி வசந்தம் பரப்பிய
ஆசை உறவே அகிலம் துறந்தீரே”

பிற அறிவித்தல்கள்

  1. 13 ஆகஸ்ட், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.