நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை பத்மசோதி
வயது 5522 ஆகஸ்ட், 1964 – 26 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- நெடுங்கேணி
- வாழ்ந்த இடம்
- Pickering, இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா நெடுங்கேணி மருதோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வசிப்பிடமாகவும், இந்தியா சென்னையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பத்மசோதி அவர்களின் நன்றி நவிலல்.
பண்பின் சிகரமாய் பாசத்தின் உறைவிடமாக எங்கள் வாழ்வின் வழி காட்டியாய் திகழ்ந்து எம்மைவிட்டுப் பிரிந்து இறைபதம் எய்திய எங்கள் குடும்பத்தின் குலவிளக்கு கிருஷ்ணபிள்ளை பத்மவனிதா
அன்னார் நோயுற்ற செய்தி அறிந்து வைத்தியசாலைக்கு நேரில் வந்து அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும் அன்னாரின் மறைவுற்ற செய்திகேட்டு அனுதாபச் செய்திகள் அனுப்பியவர்களுக்கும் கண்ணீர் அஞ்சலி மூலம் வெளியிட்டவர்களுக்கும் தொலைபேசி மூலம் எமக்கு ஆறுதல் கூறி எங்கள் துக்கத்தில் பங்கு கொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் அதே போல் இலங்கையிலும் அன்னாரின் துயரத்தில் பங்கெடுத்த உற்றார், உறவினர், நண்பர்கள் ஆகிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்.
பல மைல்கடந்தும் பார்வையாளர்கள் மண்டபத்திற்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் மலர்வளையம் சாத்தியவர்காளுக்கும் மற்றும் சக உதவிகள் புரிந்து எங்களுக்கு வழி காட்டியவர்களுக்கும் இறுதி கிரியைகளிலும் தேவையான உதவி ஒத்தாசை புரிந்த அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அறிந்தவர்கள் அயலவர்கள் அனைவருக்கும் அந்தியொட்டி நினைவுகளில் கலந்து கொண்டவர்களுக்கும் எங்களது மனப்பூர்வமான நன்றிகளை பணிவுடன் சமர்ப்பிக்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் வடக்கில் தமிழர் பகுதியும் குளங்கள் நிறைந்த இடமும் காடும் தேன்களும் நிறைந்து விளங்கும் வவுனியா நெடுங்கேணியில் 22/Aug/1964 ஆம் ஆண்டில் திரு.திருமதி கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளுக்கு அழகு மகனாக திரு.பத்மசோதி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார். அ
த்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் கிருஸ்ணபிள்ளை, மங்களம், பரிமளம், யோகநாயகம், தெய்வேந்திரம், யோகம்மா, இராசமணி, சாந்தகுணநாயகி, பத்மறஞ்சனி போன்ற சகோதரர்களுடன் கூடப் பிறந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், திரு.திருமதி குழந்தைவேல் கண்ணகை தம்பதிகளின் அழகிய பெண்ணான ஜெயராணி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இருவரும் சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக சனுசா, நிருதுசன் எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று வளர்த்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் சோதி என அன்பாக அழைக்கப்படும் இவர் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தது மட்டுமல்லாது இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 26.10.2019 இல் 55 வயதில் கனடாவில் இறையடி எய்தினார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

