1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை குமாரவேலு
நிர்வாகப் பொறியியலாளர், நீர்ப்பாசன திணைக்களம் திருகோணமலை
வயது 8315 ஏப்ரல், 1936 – 19 ஜூன், 2019
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், அரசடி வீதியை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை குமாரவேலு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்!
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்ததுள்ள யாழ்ப்பாணத்தின் மானிப்பாயில் புகழ் பூத்த சீமான் திரு.கணபதிப்பிள்ளை அவர்தம் பாரியார் திருமதி அன்னமுத்து அவர்களின் அருமைப் புத்திரனாக 15/Apr/1936 ஆம் ஆண்டில் திரு.குமாரவேலு அவர்கள் இவ் அழகிய பூமியில் சின்னத்துரை, ராசதுரை, செல்வரட்டினம், சுப்பிரமணியம், அன்னம்மா, அன்னலட்சுமி, சரஸ்வதி, மகேஸ்வரி, நாகேஸ்வரி, தவமணி போன்றவர்களின் பாசமிகு சகோதரனாக அவதரித்தார்.
அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடனும் சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டதுடன், ஓவசியரான திரு.திருமதி கந்தையா ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மகள் தேவி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றிக் கொண்டார். இனிமையான இவர்களின் இல்லறவாழ்வின் பயனாக ஹரன், துஷ்யந்தி, திவாகரன் போன்ற நற் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து செல்வா செல்லையா, சீலா என்பவரைத் திருமணம் முடித்து வைத்து பிரவீன், திவ்யன், பிரியங்கா, கீர்த்திமீரா, ரிஸ்மிதா போன்ற பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் யாழ்ப்பாணம் நீர்ப்பாசன இலாகா பொறியியளாளராக கடமையாற்றியதுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்,இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் சகோதரபாசம் நிறைந்தும்,பிள்ளைப்பாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 19.06.2019 இல் 83 வயதில் கனடாவில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
"மானிப்பாய் மண்ணின்
......மங்கா ஒளியே
வானை போல்
......கல்வியில் உயர்ந்து
வேனில் காலமாய்
.....அழகுற விளங்கி
கானல் நீராய்
.....கரைந்து போனீரே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

