1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை சிவலிங்கம்
சிவலிங்கம் மோட்டோர்ஸ் மற்றும் Transport உரிமையாளர்
வயது 8028 ஏப்ரல், 1938 – 30 ஜூன், 2018
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சிவலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பும் பண்பும் அறிவும் நிறைந்த
புன்னகையின் புகலிடமே உம்மருகில்
நாம் வாழும் பாக்கியத்தை
இழந்துவிட்டோம் அப்பா!
பாசத்தின் திருவுருவாய்
பண்பின் உறைவிடமாய்
எங்களுக்கெல்லாம் அன்புக் காட்டி
அரவணைத்த எங்கள் அன்புத் தெய்வமே
ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்கள் நினைவுகள்
எங்கள் நெஞ்சங்களை
விட்டு என்றும் நீங்காது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
”பிறவிகளில் மிகச் சிறந்த பிறவி மனிதப் பிறவியாகும் ” அரிது அரிது மனிதராதல் அரிது” என்பது ஆன்றோர் வாக்கு” சலியாத உழைப்பாளர்களும் சகல வளங்களும் கொண்ட எழில் கொஞ்சும் ஈழமணித் திருநாட்டின் முத்தென் விளங்கும் யாழ்ப்பாணத்தின் மத்தியில் அமைந்துள்ள வண்ணார்பண்ணை தனிச்சிறப்பு கொண்டது. இப்படிப்பட்ட சிறப்பைக் கொண்ட புனித பூமியில் சிவபதமடைந்த வர்த்தக பிரமுகர் கணபதிப்பிள்ளை அன்னலட்சுமி தம்பதியினர் புரிந்த நற்தவத்தின் பயனாக 28-04-1938 அன்று கணபதிப்பிள்ளை சிவலிங்கம் அவர்கள் பிறந்தார்.
அன்னார் தமது ஆரம்பக்கல்வியையும் அதைத் தொடர்ந்து உயர்கல்வியையும் சைவமும் தமிழும் வளர்த்த அறிஞர்கள் பலரையும் தந்த யாழ். வண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரியில் கற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் உயர் சைவ வேளாளர் குலத்தில் உதித்தவராவார். தன் தந்தை சார்வழி வந்த தனது பாரம்பரிய உயர் குடித்தொழிலான வர்த்தகத்தில் சிறந்து விளங்கியதுடன் தனது சொந்த முயற்சியில் சிவலிங்கம் மோட்டோர்ஸ் அன் ரான்ஸ்போட் எனும் தொழில் ஸ்தாபனத்தை உருவாக்கி பலருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கி அவர்களின் வாழ்க்கை சிறக்க வழிவகுத்தார்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

