நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா சிவபாதநாதன்
மன்னார் சிவகாந்தி றைஸ்மில் முன்னாள் உரிமையாளர்
வயது 684 நவம்பர், 1950 – 14 மே, 2019
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎங்கள் குடும்பத்தலைவர் கந்தையா சிவபாதநாதன் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள் பிரசுரித்தோர், இறுதி நிகழ்வுகளில் பங்குகொண்டோர், மலர்வளையங்கள் வைத்தோர் மற்றும் பலவழிகளிலும் உதவி நின்ற அன்பான உறவுகளுக்கும் எங்கள் இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும்,பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ள இடமும் தெங்கு தோட்டம், நெல்வயல்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த நல்லூரில் 04/Nov/1950 இல் ஒவசியர் கந்தையா நல்லம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக சிவபாதநாதன் அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் பிறந்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் காந்திமதி, சற்குணவதி, கனகாம்பிகை, சந்திரவதனி, சியாமளா, சிவம் போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் கைலாசபிள்ளையார் கோயில் லிங்கம் மில் வைத்திருந்த சிவலிங்கம் பொன்மணி தம்பதிகளின் அன்பு மகள் யோகேஸ்வரி அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து சிவலட்சுமி, கார்த்திகா ஆகிய அற்புத பிள்ளைகளை ஈன்றெடுத்து பாதுகாத்து வளர்த்ததுடன் இன்பமாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் விஜயா என அன்பாக அழைக்கப்படும் இவர் மன்னார் சிவகாந்தி றைஸ்மில் உரிமையாளராகவும் செயற்பட்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார் இவ்வாறு மனைவி,பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 14.05.2019 இல் 68 வயதில் கனடாவில் உள்ள Markham இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
நல்லூர் மண்ணின்
......நமஸ்கார உறவே
நற்கருனை உருவே
.......நல்ல உள்ளமே
அன்பின் வடிவாய்
.....வாழ்ந்த உயிரே
அகிலம் துறந்து
.......அழவைத்துப் பிரிந்தீரே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

