ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தசாமி ஞானசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தசாமி ஞானசுந்தரம்

ஓய்வுபெற்ற கடதாசி கூட்டுத்தாபன கணக்காளர்

வயது 8611 மார்ச், 1933 – 5 மே, 2019

பிறந்த இடம்
கோண்டாவில்
வாழ்ந்த இடம்
கொழும்பு, Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி ஞானசுந்தரம் அவர்கள் 05-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சங்குபதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருந்தவம் அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேஸ்குமார்(கனடா), சிவகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கோமதி, சுமித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான லீலாவதி, சண்முகநாதன், ரத்னவடிவேல் மற்றும் செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதுமிதா, மதுரா, சங்கவி, ராகவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

ஞானசுந்தரம் வரலாறு:-

யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும் நெல்வயல்களும், மிளகாய்ச்செடிகளும், வெங்காய வயல்களும்,மரக்கறித் தோட்டங்களும், பழவகைகள், பயன்தரு மரங்கள் என செழிப்பு மிகுந்த கோண்டாவில் மேற்கில் 11-03-1933 இல் கந்தசாமி சங்குபதி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் ஞானசுந்தரம் அவர்கள் லீலாவதி, சண்முகநாதன், ரத்னவடிவேல், செல்வநாயகி ஆகிய உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

அத்துடன் அன்பும், அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் சீனித்தம்பி நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகள் அருந்தவம் அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும், சந்தோசமாகவும் வாழ்ந்து சுரேஸ்குமார், சிவகுமார் எனும் அழகுப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்ததுடன் கோமதி, சுமித்திரா ஆகியவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து தனது கடமையை சிறப்புடன் செய்ததுடன், மதுமிதா, மதுரா, சங்கவி, ராகவி ஆகிய பேரப்பிள்ளைகளை அணைத்து மகிழ்ந்தார்.

மேலும் கொழும்பில் பல காலம் வாழ்ந்ததுடன், கடதாசி கூட்டுத்தாபனத்தின் கணக்காளராக வேலை செய்து ஓய்வு நிலையும் அடைந்ததுடன், வாழ்வில் நற்பண்பும், ஒழுக்கமும் நிறைந்தவராகவும், பெறுமைசாலியாகவும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன், இரக்ககுணம் நிறைந்தவராகவும், அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார்.

இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 05-05-2019 இல் 86 வயதில் கனடாவில் உள்ள Scarborough நகரில் இறையடி எய்தினார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

ஞான உருவே
நன்றி உள்ளமே
பாச மலையே
பண்பு உறவே
வாழ்வில் உங்களை
மறப்பது கடினம்
நித்தம் மனதில்
நினைத்து ஏங்குவோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.