ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தசாமி  கதிரமலைநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தசாமி கதிரமலைநாதன்

ஓய்வுபெற்ற Physiotherapist

வயது 8211 ஏப்ரல், 1937 – 5 மே, 2019

பிறந்த இடம்
வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி கதிரமலைநாதன் அவர்கள் 14-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, புத்திரபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற தேவதாஸ், கமலம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ருக்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

கந்தவேள், ஜெயந்தி, கமலநாதன், கரிகாலன், கணேஷநாதன், கஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குளோடியா, தங்கவேல், வனித்திரா, சுகந்தி, யஸ்பிரிட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மார்சல், மீரா, தினேசன், மயூரன், செந்தூரன், கிரிஷோத், ஹர்ஷா, அபிஷோத், அபிஷா, கவின், கேஷவ், கிரிஷான், ஜெனிலியா, கப்பிரியலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 15-05-2019 புதன்கிழமை அன்று மு.ப 09:30 மணிமுதல் பி.ப 09:30 மணிவரைக்கும், 16-05-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 09.30 மணிமுதல் பொரளை Lanka Florists மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும், தெங்கு தோட்டம், நெல்வயல்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,புகையிலைத் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த வட்டுக்கோட்டையில் கந்தசாமி புத்திரபாக்கியம் தம்பதிகளுக்கு சிரேஷ்ட புதல்வனாக கதிரமலைநாதன் அவர்கள் 11/Apr/1937 இல் அழகு நிறைந்த இவ் ஊரில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் தேவதாஸ் கமலம்மா தம்பதிகளின் அன்பு மகள் ருக்மணி அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து கந்தவேள், ஜெயந்தி, கமலநாதன், கரிகாலன், கணேஷநாதன், கஜேந்திரன் ஆகிய அற்புத பிள்ளைகளை ஈன்றெடுத்து பாதுகாத்து வளர்த்ததுடன்,குளோடியா, தங்கவேல், வனித்திரா, சுகந்தி, யஸ்பிரிட் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து மாமாவிற்குரிய கடமையை சிறப்புற செய்ததுடன் மார்சல், மீரா, தினேசன், மயூரன், செந்தூரன், கிரிஷோத், ஹர்ஷா, அபிஷோத், அபிஷா, கவின், கேஷவ், கிரிஷான், ஜெனிலியா, கப்பிரியலா போன்ற பேரப்பிள்ளைகளுடன் பேசி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இவர் physiotherapist ஆகச் செயற்பட்டு ஓய்வு நிலை அடைந்தார், எப்பொதும் புன்னகை முகத்துடன்,நகைச்சுவையாக பேசும் குணம் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார் இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 05.05.2019 இல் 82 வயதில் கொழும்பில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

வட்டுக்கோட்டை மண்ணின்
......வடிவான மைந்தன்
வாழ்க்கை முழுவதும்
.......இன்பமாக வாழ்ந்த
ஆண் அழகனே
.....அழகிய வீரனே
ஆதவற்று தவிக்கும்
.......அருமை உறவுகள்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.