ஆறுதல்

நன்றி நவிலல்

கந்தசாமி லூர்த்தம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தசாமி லூர்த்தம்மா

வயது 8123 செப்டம்பர், 1937 – 26 ஜூலை, 2019

பிறந்த இடம்
வராத்துப்பளை
வாழ்ந்த இடம்
Herning

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

அன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு எம்முடன் சேர்ந்து துன்ப துயரங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களுக்கும், உலகநாடுகளில் இருந்து தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த பருத்தித்துறை வராத்துப்பளையில் 23/SEP/1937 இல் திரு.திருமதி. வலோரியாம்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அருமை மகளாய் லூர்த்தம்மா அவர்கள் வலோரியாம்பிள்ளை தேவசகாயம் எனும் உடன்பிறப்புடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி சின்னையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகன் திரு.சின்னையா கந்தசாமி என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக கலைமதி, கலைமகள், அருந்ததி, கலைச்செல்வன், அகிலன் போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து அன்ரனிதாஸ், புஸ்பதாஸ், கெங்காதரன், கவிதா, நிலாந்தினி போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து ஜானுகா, சகானா, ஜெனுசன், பிரவீன், பிரசன்னா, ஸ்ரெவ்வனி, கிறிஸ்ரினா, லின்சியா, லக்சியா, ஜெனிஸ்ரன், கெவின், ஜான்சி, எட்வின், அஸ்வின், மல்வின் போன்ற பேரப்பிள்ளைகளுடனும், கீடா, மீலஸ்சின் போன்ற பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 26.07.2019 இல் 81 வயதில் டென்மார்க்கில் உள்ள Herning நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

தாய் உருவே - எங்கள் தங்க உறவே
சேய்கள் மீது - அளவற்ற
அன்பு கொண்டு
பாய்தனில் படுத்தாது - எம்மை
தோள்தனில் அனைத்த
வேய்குழல் நாதமே - அன்பில்
யேசுவின் உள்ளமே
வீழ்ந்தீரே மண்ணில் - கண்ணில்
விழிநீர் சொரிய

பிற அறிவித்தல்கள்

  1. 27 ஜூலை, 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 26 ஜூலை, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.