நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி பரமேஸ்வரன்
வயது 6121 ஜூலை, 1958 – 2 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- ஹனோவெர், Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் மிக அருகில் உள்ளதும் படித்த சமுதாயத்தைக் கொண்டதும், பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடமும் மக்கள் செறிந்து வாழும் பகுதியுமான திருநெல்வேலி கிழக்கு கல்வியங்காட்டில் 21/JUL/1958 இல் திரு.திருமதி கந்தசாமி நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனாக திரு.பரமேஸ்வரன் அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சிவசுப்ரமணியம், சண்முகநாதன், பாலசுந்தரம், பத்மநாதன், விஜயகுமாரன், கணேசலிங்கம், கமலநாதன், தயாநந்தன் எனும் சகோதரர்களுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும், திரு.திருமதி கந்தையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகள் மாலதி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து நிஷாந் எனும் அழகிய பிள்ளையைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் ஜேர்மனியில் உள்ள Hanover நகரிலும் வாழ்ந்ததுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் கொண்ட இவர் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டு விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 02.09.2019 இல் 61 வயதில் கனடாவில் உள்ள Montreal நகரில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
புன்னகை முகமுடன் பூத்திடும் மலராய்
இன்முகம் காட்டி இதழ்விரித்து அழைக்கும்
மன்னனே மான்புமிகு கண்ணணே
நின் முகம் கான எம் முகம் தவிக்கிது
வந்திடு ஒருமுறை தந்திடு இன்பத்தை.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

