3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி இராஜ்குமார்
வயது 5312 ஆகஸ்ட், 1965 – 1 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Mantes-La-Ville
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி இராஜ்குமார் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூன்று ஆண்டுகள்...!
பிரிவு என்ற வலியை
நாம்சுமந்து நின்று..
மூன்றுஆண்டுகள் முடிந்தோடி விட்டதையா!
மனம், புலம்பிப் புலம்பி நொந்து நிற்க
மகன் நலனுக்காய் வாழ்ந்து வருகின்றேன்
நீங்காது எம் மனதில் நிலைத்து நீர் நின்று- என்னை
நிமிர்ந்து பணி செய்ய இயக்கி நிற்கின்றீர்
உன்னை பிரிந்தே என் உள்ளம் வாடுதே - பிரிவின்
தூரம் அறிந்தும் உன்னைத் துரத்தித் தேடுதே!...
பாதிவழி வாழ்விலே ஏனோ நீ பரலோகம் புகுந்தாய்
பக்கத்தில் நீங்கள் இருப்பது போல்
நினைப்புடனேபகல் இரவு - கடக்குதையா
ஆண்டு மூன்று மறைந்து விட்டது அப்பா!
அகலுமா பிரிவின் சோகம் மறையுமா
நினைவின் பாசம் எங்களை நிர்க்கதியாய்
பரிதவிக்க விட்டு எங்கு சென்றீர்கள்
காலங்கள்ஆயிரம் போனாலும்
மறக்க முடியுமா உங்கள் நினைவுகளை!
அப்பா என்று அழைக்க நீங்கள் இல்லையே
அடி மனதில் வலி துடிக்க உயிரோடு வாழ்கிறோம்
எங்கள் உயிர் உள்ளவரை எங்கள் நினைவுகளில்
கலந்தே இருக்கும் உங்கள் நினைவுகள் அப்பா!
அன்புத் தந்தையே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— மகன், மனைவி
வாழ்க்கை வரலாறு
சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்ததுள்ள யாழ்ப்பாணத்தின் அத்தியடியில் புகழ் பூத்த சீமான் திரு.கந்தசாமி செட்டியார் அவர்தம் பாரியார் திருமதி முத்துலட்சுமி அவர்களின் அருமைப் புத்திரனாக 12/AUG/1965 ஆம் ஆண்டில் திரு.இராஜ்குமார் அவர்கள் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.
அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் சிறிகரன், சிறிவத்சலா, நளாயினி, ரேவதி, சட்டநாதன் எனும் அன்பு உடன்பிறப்புகளுடனும் தன் தந்தையுடனுன் சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டார் மேலும் திரு.திருமதி கிறகரி சாமுவேல் அன்னமேரி கிரேஸ் தம்பதிகளின் அன்பு மகள் சாமினி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக றோமா அஜித் போன்ற அழகுப் பிள்ளையைப் பெற்று வளர்த்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன், பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கியதுடன் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 01.07.2019 இல் 53 வயதில் பிரான்ஸில் உள்ள Mantes-La-Ville நகரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
"வசீகரம் கொண்ட
......வதன உறவே
ஆசீர்வாதம் பல
......அன்புடன் பெற்று
வாழ்ந்து வளர்ந்து
..... நன்மை செய்து
வீழ்ந்து போனீரே
.....விலையற்ற உயிரே"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

