1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா கனகசபை யோகநாதன்
J.P உரிமையாளர்- சரவணபவன் ஆபரண மாளிகை சாவகச்சேரி, நிறுவனர்- திருபுகழ் மண்டபம்- மீசாலை
வயது 789 செப்டம்பர், 1940 – 24 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி சங்கத்தானை குமரகோட்டம் தாமோதரம்பிள்ளை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா கனகசபை யோகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான அப்பாவே!
உங்கள் அன்புச் சிறைக்குள் அடைபட்டு
இன்புற்று இருந்த இனிய வசந்த காலம்
எங்கள் இதயத்துள் இன்பவலியாய்
எமக்குள்ளே ஆன்மாவை அச்சுறுத்த
ஏன்? எங்கே? பிரிந்து போனீர்கள்!
நீ இல்லாத நாமும்
நிலா இல்லாத வானம்!
நம் வீட்டு சூரியன் அழுகிறது
துடைக்க நினைக்கும் விரல்கள் எரிகிறது
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...
பிள்ளைகளும் மனைவியும்
உமை நினைத்து வாடிடவே
போனது எங்கேயோ ?
உறவுகளைப் பிரிந்து!
அப்பா என்று அழைக்க நீங்கள் இல்லையே
அடி மனதில் வலி துடிக்க உயிரோடு வாழ்கிறோம்
எங்கள் உயிர் உள்ளவரை எங்கள் நினைவுகளில்
கலந்தே இருக்கும் உங்கள் நினைவுகள் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில்.தமிழ் பேசும் மக்களும், கல்வி அறிவு கூடிய சமுதாயங்களைக் கொண்ட வடபுலத்தில், A9 வீதி ஊடறுத்துச் செல்லும் அழகிய தென்மராட்சியில் சகல வளங்களைக் கொண்ட சாவகச்சேரி சங்கத்தானையில் 09/SEP/1940 இல் திரு.திருமதி கனகசபை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனாக திரு.யோகநாதன் அவர்கள் இவ் அழகு நிறைந்த நாட்டில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் பொன்னம்பலம், செல்வமலர், செல்வராசா, சின்னையா நவநீதன் மற்றும் நீலாம்பிகை எனும் உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும், செல்லையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகள் லோகேஸ்வரி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து செந்திமயூரன், திருவேரகன், சிவசேந்தன், தேவகுஞ்சரி எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்ந்து கீதாலக்சுமி, பானுஜா, இரகனி, விமலச்சந்திரன் என்பவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து விசாகன், கார்த்திகன், தேசிகன், வர்ஷிகா, ஆதிரன், தீட்ஜா, மதுராங்கினி, யோகவிந்தன், விசாகினி, அபிசாகினி, லக்ஜாயினி போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் j.p உரிமையாளர்-சரவணபவன் ஆபரண மாளிகை சாவகச்சேரி, மீசாலை திருபுகழ் மண்டபம் நிறுவனரான இவர் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 24.07.2019 இல் 78 வயதில் சாவகச்சேரி சங்கத்தானையில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
உழைத்த எம் உன்னத உறவே
நிலைந்து வாழ்ந்த நின்மதி உயிரே
களைப்பை நினைந்து கால்தடம் மாறாது
அலையாய் எழுந்து அன்பு மழை பொழிந்து
கலைந்து போனீரே கருமேகம் போல்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

