மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா சிவானந்தன்
Textile Technologist
வயது 762 ஜூலை, 1943 – 10 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- சுழிபுரம், பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், சுழிபுரத்தை வதிவிடமாகவும், தற்போது லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவானந்தன் அவர்கள் 10-07-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தளையசிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆனந்தி அவர்களின் அன்புத் தந்தையும்,
குமரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
சியா, சேயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கனகாம்பிகை, சிவப்பிரகாசம் காலஞ்சென்ற சிவகுரு நாதன், ஞானாம்பிகை, யோகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், குஞ்சிதலீலாவதி, சத்தியபாமா, காலஞ்சென்றவர்களான சுந்தரேஸ்வரன், பாலகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
தென் கிழக்காசியாவில் முக்கியமான நாடும் மலாக்கா நீரிணைக்கு அருகில் உள்ளதும் கப்பல் போக்குவரத்தின் முக்கிய வலயமாக விளங்கும் பகுதியில் சிறப்பும் சகல வளங்களைக் கொண்டதுமான மலேசியாவில் 02/JUL/1943 இல் கந்தையா பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனாக திரு.சிவானந்தன் அவர்கள் இவ் அழகு நிறைந்த நாட்டில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் கனகாம்பிகை, சிவப்பிரகாசம், சிவகுருநாதன், ஞானாம்பிகை, யோகாம்பிகை போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும், தளையசிங்கம் தங்கம்மா தம்பதிகளின் மகள் ரஞ்சனி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து ஆனந்தி எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்த்து குமரன் என்பவருக்கு திருமணம் முடித்து வைத்து சியா, சேயன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் யாழ். சுழிபுரத்தில் வாழ்ந்த இவர் Textile Technologist ஆக இருந்து ஓய்வு பெற்றதுடன் அன்பான அரவணைப்பால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இவ்வாறு மனைவி,பிள்ளை,பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 10.07.2019 இல் 76 வயதில் பிரித்தானியாவில் உள்ள London நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
மலேசியாவில் பிறந்து
சுழிபுரத்தில் சுகமுடன் வாழ்ந்து
கல்வியில் சிறந்து
களிப்புடன் கருணையாக மிளிர்ந்து
மண்ணில் உலவி
மரணம் அடைந்தது ஏனோ
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

