ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா மாசிலாமணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா மாசிலாமணி

உரிமையாளர்- மாசிலாமணி கடைச்சல் தொழிலகம் வன்னியசிங்கம் வீதி, தாவடி

வயது 7210 ஜூன், 1947 – 14 அக்டோபர், 2019

பிறந்த இடம்
தாவடி வடக்கு
வாழ்ந்த இடம்
தாவடி வடக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தாவடி வடக்கு காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா மாசிலாமணி அவர்கள் 14-10-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இரத்தினம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை பூரணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி(பூபதி) அவர்களின் அன்புக் கணவரும்,

பகீரதன்(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான சத்தியசீலன், சுகந்தினி மற்றும் சுகந்தன்(இயக்குனர் KMAS Engineering Contractors), ஜெயந்தினி(பிரித்தானியா), சங்கர்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பூபாலசிங்கம், மங்கையற்கரசி, காலஞ்சென்ற சுந்தரராஜா(மணி), கமலாதேவி நவரத்தினம்(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான சோதியம்மா, சண்முகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, பாலசுப்பிரமணியம் மற்றும் இரத்தினம்மா, திருச்செல்வம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுஜித்தா(சுவிஸ்), கோணேஸ்வரன்(பிரித்தானியா), கிமாலினி(பிரதேச செயலகம்- யாழ்ப்பாணம்), சங்கீதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாரா, யதுராம், நிவியன், நக்‌ஷத்திரா, மவிஷ்கா, அபிஷா, கபிஷா, அக்‌ஷரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-10-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும், சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கிய பொன் பூமியான யாழ்ப்பாணத்தின் தாவடி வடக்கில் 10/JUN/1947 ஆம் ஆண்டில் திரு.திருமதி கந்தையா இரத்தினம்மா தம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.மாசிலாமணி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் பூபாலசிங்கம், மங்கையற்கரசி, சுந்தரராஜா, கமலாதேவி நவரத்தினம், சோதியம்மா, சண்முகராசா எனும் உடன்பிறப்புகளுடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், திரு.திருமதி அப்புத்துரை பூரணம்மா தம்பதிகளின் அன்பு மகளான நாகேஸ்வரி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாக வாழ்ந்து வந்தார்.
இருவரும் சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக பகீதரன், சத்தியசீலன், சுகந்தினி, சுகந்தன், ஜெயந்தினி, சங்கர் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று சுஜித்தா, கோணேஸ்வரன், கிமாலினி, சங்கீதா என்பவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து சாரா, யதுராம், நிவியன், நக்ஷத்திரா, மவிஷ்கா, அபிஷா, கபிஷா, அக்ஷரா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் ஆசாரியார் என அனைவராலும் அழைக்கப்படும் இவர், மாசிலாமணி கடைச்சல் தொழிலக உரிமையாளராக விளங்கியதுடன் புத்தகங்கள் வாசிப்பதையும், தினசரி நாளிதழ்களை படிப்பதையும் தனது அன்றாட பொழுதுபோக்காக கொண்டிருந்ததுடன், அதிக பக்தி கொண்டவராகவும் மேலும் உறவுகளிடம் பாசத்தை பொழிந்து, வாழ்வில் நேர்மையை கடைபிடித்த இவர் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணமும் கொண்டும் விளங்கினார்.

முழுக் கதையையும் வாசிக்க

இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 14.10.2019 இல் 72 வயதில் தாவடியில் இறையடி எய்தினார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.