மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா பாலசுந்தரம்
B.Sc
வயது 857 செப்டம்பர், 1935 – 25 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- மாவிட்டபுரம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசுந்தரம் அவர்கள் 25-10- 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா குணவதி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், தம்பிஐயா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்கந்தகுமார்(பொறியியலாளர்), சதீஸ்குமார்(வழக்கறிஞர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினேஸ்வரி, சுவாமிநாதன், பாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரஜ்னா பவித்திரன் ஏரின்நிக்கல் அவர்களின் அன்பு மாமனாரும்,
அஜய் அவர்களின் அன்புப் பேரனும்,
பவித்திரன் பானுமதி தம்பதிகளின் அன்பு சம்பந்தியும்,
காலஞ்சென்ற கந்தசாமி, செந்தில்நாதன், தருமராணி, பவானி, கமலவேணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
COVID- 19 காரணமாக வருகை தரும் உற்றார் உறவினர்கள் கீழுள்ள தொலைபேசியை அழைத்து வசதியுள்ள நேரத்தை முன்கூட்டியே அறியத்தந்தால் அதற்கேற்ற ஒழுங்குகள் பாதுகாப்பு விதிகளுக்கமைய மேற்கொள்ளப்படும். உள்ளே வர விரும்பாதவர்கள் 01-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 1:00 மணியளவில் நடைபெறும் இறுதி மரியாதைக்கான வாகனப் பவனியில் கலந்துகொள்ளலாம். வாகனத்தைவிட்டு வெளிவரத்தேவையில்லை.
வாழ்க்கை வரலாறு
கந்தையா பாலசுந்தரம் அவர்கள் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும் பின்னர் இந்தியா பூனா வாடியாக் கல்லூரியிலும் பயின்று பட்டதாரியானார். கொழும்பு கட்டிடத் திணைக்களத்தில் நூலகப்பிரிவு பொறுப்பதிகாரியாகவும், பின்பு நைஜிரியா சென்று சொக்கோட்டோ மாநிலத்தில் உள்ள ஜெல்வா ஜெரியில் உள்ள அரசினர் விஞ்ஞான உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியாகவும் கடமையாற்றினார். பின்னர் கனடாவில் குடியேறி ஒப்பந்த அடிப்படையிலான தொழிகளையும், பகுதிநேரத்தில் தனக்கு பெரிதும் விரும்பத்தக்க ஆசிரியத் தொழிலை மாணவர்களைச் சேர்த்து தொடர்ந்து வந்தார்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

