ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா கனகராயர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா கனகராயர்

வயது 7810 மே, 1941 – 1 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
பூநகரி
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கிளிநொச்சி பூநகரி வாடியடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கனகராயர் அவர்கள் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புத்திரரும், சதாசிவம்(உடையார்) பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சத்தியபாமா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

உதயராஜ்(ராசன்- லண்டன்), இரத்தினராஜ்(ரகு- லண்டன்), ரஜினி(கனடா), நளினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுவந்தினி, ஜெயரதி, மனோகரன், பிரதாபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பூரணம், சண்முகலிங்கம்(முழங்காவில்), தனலட்சுமி(முன்னாள் அதிபர்), கமலாதேவி(பூநகரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வைரவநாதன், ராமகிருஸ்ணன் மற்றும் காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரன், ஆறுமுகநாதன், கணேசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஸ்ணு, வருணிகா, அருசன், தென்னவன், கைலவன், யதுஸ்கா, டயானி, அருகன், ஒவிகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

கிளிநொச்சியில் பச்சை வயல்களும் சலசலத்து ஓடும் நீரோடையும் காற்றில் நெல்மணிகள் அசைந்தாடும் இடமும், படித்த சமுதாயத்தைக் கொண்ட அழகு நிறைந்த பூநகரியில் 10/MAY/1941 இல் திரு.திருமதி கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின்
அன்பு மகனாக திரு.கனகராயர் அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் பூரணம், சண்முகலிங்கம், தனலட்சுமி, கமலாதேவி எனும் சகோதர்களுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும், திரு.திருமதி சதாசிவம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகள் சத்தியபாமா எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து உதயராஜ், இரத்தினராஜ், ரஜினி, நளினி எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்த்து சுவந்தினி, ஜெயரதி, மனோகரன், பிரதாபன் போன்றவர்களைத் திருமணம் முடித்து வைத்து விஸ்ணு, வருணிகா, அருசன், தென்னவன், கைலவன், யதுஸ்கா, டயானி, அருகன், ஒவிகன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் கொண்ட இவர் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டு விளங்கினார்.

இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 01.09.2019 இல் 78 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

பூநகரி மண்ணின் பூவிழியே
நந்தவனத்து நற் பூவே
பந்தபாசம் நிறைந்த உறவே
வந்தோம் உம்மால் பூமியில்
வளர்ந்தோம் அன்பு வளர்ப்பால்
எண்ணங்கள் நிறைவேற்றி
எமை விட்டுப் பிரிந்தீரே.

பிற அறிவித்தல்கள்

  1. 1 அக்டோபர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.