ஆறுதல்

அகாலமரணம்

கந்தையா கோகுலசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா கோகுலசிங்கம்

வயது 422 மார்ச், 1977 – 26 மே, 2019

பிறந்த இடம்
அளவெட்டி
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அளவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் St. Louis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கோகுலசிங்கம் அவர்கள் 26-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பத்மாவதி தம்பதிகளின் இளைய மகனும், பரஞ்சோதி சந்திராதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அபிதா(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

பத்மயா, காவியா, ஆரணி, பானுயன், ஆராதனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்மகுலசிங்கம்(பெரிய தம்பி), வர்ணகுலசிங்கம்(குஞ்சன்), அருணகுலசிங்கம்(அருணன்), நகுலகுலசிங்கம்(நகுலன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும், மக்கள் செறிந்து வாழும் பகுதியும், பயன்தரு மரங்கள்,நெல்வயல்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த அளவெட்டி மேற்கில் 02/MAR/1977 ஆம் ஆண்டில் கந்தையா பத்மாவதி தம்பதிகளுக்கு இளைய மகனாக கோகுலசிங்கம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் தர்மகுலசிங்கம், வர்ணகுலசிங்கம், அருணகுலசிங்கம், நகுலகுலசிங்கம் போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் பரஞ்சோதி சந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகள் அபிதா என்பவரைத் திருமணம் செய்து இன்பமாக வாழ்ந்து பத்மயா, காவியா, ஆரணி, பானுயன், ஆராதனா போன்ற பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்ததுடன் அன்பாக பேசி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் கோபு என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராக விளங்கியதுடன், பழைய திரைப்படங்கள் பார்ப்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கினார் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 26.05.2019 இல் 42 வயதில் பிரான்ஸில் உள்ள St.Louis நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

அளவெட்டி மண்ணின்
......அன்பு உள்ளமே
புன்னகை முகமே
.......பூ விழியே
பாரதி மீசையே
........பால் மனமே
கலங்கி அழுகிறோம்
......கருணை உள்ளமே

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.