மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குட்டியன் கந்தையா
வயது 7426 ஆகஸ்ட், 1944 – 3 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- கரணவாய் தெற்கு
- வாழ்ந்த இடம்
- London, கரணவாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அறிவாலயம் கரணவாய் தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், தற்போது கரணவாயை வசிப்பிடமாகவும் கொண்ட குட்டியன் கந்தையா அவர்கள் 03-07-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டியன் கற்பகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி ஆச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தம் அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தி(சுவிஸ்), மேனகா(இலங்கை), மைதிலி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வநாதன்(சுவிஸ்), குகநேசன்(இலங்கை), ஜெயன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிங்கன், சீனித்தம்பி, சின்னாச்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தகுணம்(பிரித்தானியா) அவர்களின் அன்பு மைத்துனரும்,
சிவகரன்(பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமாவும்,
மிதுனன், மிதுசா, பிரணவன், இலட்சியா, ஆதுர்யன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-07-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான அழகு நிறைந்த யாழ்ப்பாணத்தில்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த கரணவாய் தெற்கு கரவெட்டியில் 26/AUG/1944 இல் திரு.திருமதி குட்டியன் கற்பகம் தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக திரு.கந்தையா அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சிங்கன், சீனித்தம்பி, சின்னாச்சி போன்ற உடன்பிறப்புகளுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு திருமதி சின்னத்தம்பி ஆச்சி தம்பதிகளின் அன்பு மகள் சாந்தம் எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக சாந்தி, மேனகா, மைதிலி போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து செல்வநாதன், குகநேசன், ஜெயன் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து மிதுனன், மிதுசா, பிரணவன், இலட்சியா, ஆதுர்யன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் காந்தன் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் தன்நலமற்ற சமூக சேவையாளரும்,எல்லோர் நெஞ்சங்களிலும் அழியாத அன்பை விதைத்தவர். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார். இவ்வாறு மனைவி மற்றும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 03.07.2019 இல் 74 வயதில் கரணவாயில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
பௌர்ணமி நிலவு ஒன்று
பாதியில் மறைந்து
நிஜ உறவுகளை
நித்தம் அழ வைத்து
பல நினைவுகள் மனதில் நிழலாட
பாதியில் பிரிந்தீரே பைத்தியம்
ஆனோமே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

