நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா நல்லதம்பி
மல்லிகா Lorry உரிமையாளர்
வயது 8728 நவம்பர், 1931 – 21 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 12ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 5ம் வட்டாரம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபண்பின் சிகரம் பாசத்தின் உறைவிடம்
எங்கள் வாழ்வில் வழிகாட்டி உயர்த்திய
எம் குலவிளக்கு அணைந்த வேளை
ஓடோடி வந்து உதவிகள் புரிந்துஉடன் இருந்து ஆறுதல் படுத்தி
கண்ணீர் சிந்தி கரம் பற்றிய
உறவுகள் அனைவருக்கும் உணர்வு கலந்த
நிறைந்த நன்றிகள் நிலையாய் மனமதில்.
நன்றிகள்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும், கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு, பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள், மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தில் 28/Nov/1931 ஆம் ஆண்டில் திரு.திருமதி கந்தையா தாமாசிப்பிள்ளை தம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.நல்லதம்பி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் சோமசுந்தரம், விநாசித்தம்பி, மயில்வாகனம், நாகரட்ணம், கதிரவேலு போன்ற சகோதரர்களுடன் பிறந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், திரு.திருமதி கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளான அமிர்தம் என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர்கள் இருவரின் வாழ்க்கையின் பயனாக தவராணி, கோமதி, ரஞ்சினிதேவி, சிவகுமார், ஜீவகுமார், சந்திராதேவி எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து மகாலிங்கம், சோதிராசா, பாலகுமார், தீபா, சுவர்ணா, குணா என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து லாவண்யா, வாகீஸ், நிஷாந்தி, அனுஜா, பரணியா, ஜனனியா, அஷாந்த, ஆதீஸ், ஆருஷா, அக்ஷயா, அஜீவ், அஸ்வின், அனிகா, அவனி போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் மல்லிகா Lorry உரிமையாளராக இவர் கடின உழைப்பாளியும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தது மட்டுமல்லாது இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 21.10.2019 இல் 87 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறையடி எய்தினார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

