நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா இரத்தினசிங்கம்
எழுத்தாளர், கவிஞர், விமர்சகர், ஊடகவியலாளர், அரச விருது - கலாபூஷணம்
வயது 7730 ஜூலை, 1940 – 30 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- ஜெயந்திநகர்
- வாழ்ந்த இடம்
- கணேசபுரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், கணேசபுரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா இரத்தினசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
சத்தியம் நீதியைத் தான் உரைத்து
சந்ததிகள் வாழ்ந்திடத் தான் உழைத்து
கற்றவர் சபையில் காலடி பதித்து
உற்றவர் மனங்களில் தனி இடம் பிடித்து
கற்பகமாய் வாழ்ந்த கற்பகத் தருவே
காலமும் நேரமும் எம்முடன் மோத
காலத்தின் கட்டளையில் நாங்களும் வாட
மாதமும் ஒன்று உருண்டு தான் ஓட
தவியாய் தவிக்கும் உறவுகள்- இங்கே
புவி மகன் உங்களைக் காண்பது எங்கே?
அன்னாரின் ஆத்ம சாந்திப்பிரார்த்தனை 30-05-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்களும் வருகை தந்து பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன விருந்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களிற்கும், எம்முடன் சேர்ந்து துன்பதுயரங்களை பகிர்ந்து கொண்டவர்களிற்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களிற்கும், நேரடியாக வந்தும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களை தெரிவித்தவர்களிற்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 74,
கணேசபுரம்,
கிளிநொச்சி.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

