ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா சிவபாதம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா சிவபாதம்

வயது 8019 பிப்ரவரி, 1939 – 26 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
கோண்டாவில்
வாழ்ந்த இடம்
கட்டுவன், Windhagen

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். குமரகோட்டம் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கட்டுவன், ஜேர்மனி Windhagen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவபாதம் அவர்கள் 26-04-2019 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தவனம் தங்கபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவரத்தினம்(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

நிறஞ்சன், சயந்தன், கவிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தர்ஷா, ரீனோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிக்கிஷா, அர்ஜூன், ஜனிக், லினோனி ஆகியோரின் அன்புப் பேரனும்,

கமலாதேவி(இலங்கை), காலஞ்சென்ற சிவலிங்கம்(ஜேர்மனி), சறோஜினிதேவி(ஜேர்மனி), சற்குணதேவி(சுவிஸ்), நவமலர்தேவி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரசேகரம் (இலங்கை), விக்னேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான சண்முகரத்தினம்(இலங்கை), கிருஸ்ணமூர்த்தி(சுவிஸ்), பரஞ்சோதி(ஜேர்மனி) மற்றும் வின்சன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கந்தவனம் தங்கப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகரத்தினம் சங்கரப்பிள்ளை, செல்வரத்தினம், காலஞ்சென்ற பரமே‌ஸ்வரா(கனடா), தங்கரத்தினம், காலஞ்சென்ற மகாசிவம்(நியூசிலாந்து), துரைசுந்தரம் தங்கராணி(நியூசிலாந்து), துரைராசா குகாயினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நெல்வயல்கள்,வாழைத்தோட்டம்,புகையிலைத் தோட்டம்,மிளகாய்,வெங்காய வயல்கள் மரக்கறித்தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகான யாழ்ப்பாணத்தில் குமரகோட்டம் கோண்டாவில் 19/FEB/1939 இல் கந்தையா பாக்கியம் தம்பதிகளுக்கு மூத்த புதல்வனாய் சிவபாதம் அவர்கள் கமலாதேவி, சிவலிங்கம், சறோஜினிதேவி, சற்குணதேவி, நவமலர்தேவி ஆகிய உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் கந்தவனம் தங்கபிள்ளை தம்பதிகளின் அன்பு மகள் தவரத்தினம்(ராசாத்தி) அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து நிறஞ்சன், சயந்தன், கவிதா ஆகிய அழகுப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் பொன் அண்ணை என அனைவராலும் அழைக்கப்படும் இவர் புண்ணிய காரியமான திருமணங்கள் நடத்தி வைத்துள்ளதுடன், குறிஞ்சிக்குமரப் பெருமானில் அதீத பக்தி உள்ளம் கொண்டவராகவும் விளங்கியதுடன். வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பெறுமைசாலியாகவும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள்,சகோதரங்கள்,பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 26.04.2019 இல் 80 வயதில் ஜேர்மனில் உள்ள Windhagen நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

கோண்டாவில் மைந்தனே
......கோவில் சிலையே
ஆண்டாண்டா அழுதாலும்
......அழியா உருவமேமண்டாலும்
மணக்கும் .....மல்லிகைப் பூவே
வீழ்ந்தாலும் தொழுகிறோம்
......வீர மகனே

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.