மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா தெய்வேந்திரன்
வயது 6318 நவம்பர், 1952 – 18 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- நவிண்டில்
- வாழ்ந்த இடம்
- நவிண்டில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரணவாய் மத்தி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தெய்வேந்திரன் அவர்கள் 18-08-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பூபாலு, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்சன்(இலங்கை), சுலேக்கா(லண்டன்), சுகந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரன்(இலங்கை), குணசுந்தரன்(இத்தாலி), அருந்தவம்(இலங்கை), இராசேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான இராசேந்திரன், மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மயூரதன்(லண்டன்), தயாபரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
இந்திராணி(இலங்கை), ஜெயக்குமாரி(இத்தாலி), விஜயரட்ணம்(இலங்கை), இராசகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராசமலர்(சுவிஸ்), செல்வமலர்(சுவிஸ்), சிவநாதன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு அத்தானும்,
விஜயகுமார்(சுவிஸ்), சுரேந்திரன்(சுவிஸ்), றொபேக்கா(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகலனும்,
பார்த்தீபன்(இலங்கை), விமலதீபன்(பிரான்ஸ்), பிறேமதீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ரஜீபரன்(சுவிஸ்), விதுர்ஜன்(சுவிஸ்), சுகானா(சுவிஸ்), அஸ்வின்(இத்தாலி) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
துவாரகா, தனுஷா, திலக்ஷன், ரித்திகா(நோர்வே), கலைவாணி(இலங்கை), மீனுஷா(பிரான்ஸ்), சுபாங்கனி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமாவும்,
மகீஷ்(லண்டன்), நர்த்தனன், கௌசிக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

