1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா விக்கினேஸ்வரன்
வயது 5114 நவம்பர், 1967 – 20 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 6ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- சூரிச்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா விக்கினேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அமைதியான புன்முறுவல்
பூக்கும் முகம்!
இரக்கமுள்ள மனம்!
பாசத்தால் அரவணைத்து
செல்லும் கைகள்!
நீ என்னிடம் பேசிய அந்த கடைசி
வார்த்தை....
உன் அமைதியான குரல்......
என்னால் இன்றும் மறக்க முடியாத
நிஜமாக என் காதில் ஒலித்துக்கொண்டே
இருக்கிறது.....
ஆசையாக வளர்த்த உன்
உடன்பிறப்புகளிடம் கூட
சொல்லாமல் போனதெங்கே அண்ணா!
நீ வருவாய் என்று தினமும்
வாசலில் தவம் கிடக்கிறோமே
அதை நீ அறியவில்லையா????
உயிர் உன் உடலை விட்டு
பிரிந்தபோதும் கூட
புன்னகை மாறாமல் வாடாத
மலராக இறைவனிடம் சென்றாயோ?
நீ விதையிட்டு சென்ற
கனகாம்பரமும் உன் புன்னகை போல்
வாடாத மலராக புன்னகை வீசுகிறது!
அண்ணா மீண்டும் ஒருமுறை
உன் தங்கையாக பிறக்க வரம் தருவாயா????
ஏக்கத்துடன் உன் அன்பு தங்கை! ரூபிகா
"மறுக்க முடியாத உண்மை மரணம் என்றாலும் !
உங்கள் ஞாபகம் நெஞ்சை நனைக்கிறது அப்பா!!
உணவுண்டு உறங்கச் செல்லும் வரை,
உணர்விலும் உணரவில்லை அப்பா!
உங்கள் உயிர் பிரியும் என்று!
பாய்ந்து வந்த அலைகள் கரை தொடும் முன்பே
கடல் வற்றிப் போனால் போல் " உங்கள் மரணம்!
கண்மூடி பார்க்கின்றோம் இத்தனையும் கணவாகி
போகாதோ என்று.
ஓராண்டும் கழிந்ததெ நீங்கள் சென்று
உங்கள் ஞாபகம் நெஞ்சை நனைக்கிறது அப்பா!
அன்னாரின் நினைவஞ்சலி 12-09-2020 சனிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் மதியபோசம் இடம் பெறும்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும்,படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த புங்குடுதீவு 6ஆம் வட்டாரத்தில் 14/NOV/1967 இல் திரு.திருமதி கந்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனாக திரு. விக்கினேஸ்வரன் அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் விஜயகுமார், விஜயபாலன், ரூபிகா, விஜயராசா, துஷிகாந், கோபிகாந், சசிகாந் என்பவர்களின் சகோதரமாக குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி சிவகுரு மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகள் சிவமதி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வினோத், அஜித் எனும் அழகிய பிள்ளையைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் கொண்ட இவர் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 20.08.2019 இல் 51 வயதில் சுவிஸில் உள்ள Zurich நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
தீவின் கரு முத்தே
தீந்தமிழ் சொத்தே
தாவிக் குதித்தாய் சுவிஸ்ஸில்
தரணிக்குக் கொடுத்தாய் நாளும்
சாவினைத் தழுவினாய் இப்போ
சரணம் அடைந்தாய் கடவுள் பாதத்தில்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

