மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா விவேகானந்தன்
வயது 665 மே, 1950 – 5 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- இணுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா விவேகானந்தன் அவர்கள் 05-10-2016 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கண்மணி அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராசா நல்லம்மா தம்பதிகளின் அவர்களின் அன்பு மருமகனும்,
மகிழ்மலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
வினோதராஜா(நோர்வே), சுவித்தா(நோர்வே), வாணி(ஜெர்மனி), சங்கீதா(ஜெர்மனி), காலஞ்சென்ற பிரியதர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இரத்னேஸ்வரி(கோண்டாவில்), காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பராசக்தி மற்றும், புவனேஸ்வரி(கோண்டாவில்), சச்சிதானந்தம்(கோண்டாவில்), மகேந்திரன்(நோர்வே), தபேந்திரராஜா(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவனேசராஜா(நோர்வே), இலங்கைநேசன்(ஜெர்மனி), நித்தியானந்தராஜா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மாணிக்கம்(மாத்தளை), காலஞ்சென்றவர்களான குமாரசாமி, பாக்கியநாதன் மற்றும், சிவப்பிரகாசம்(இணுவில்), பராசக்தி(கோண்டாவில்), கௌரி(நோர்வே), ரஞ்சிதமலர்(தாவடி), மணிமலர்(நோர்வே), பொன்மலர்(கொக்குவில்), ரகுநாதன்(சுதுமலை), சிவரூபன்(அளவெட்டி), ராசரூபன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கெரிஸ், கேடிஸ்(நோர்வே), கோகுலன், குகன், குமணன்(ஜெர்மனி), அனுஜன், சனூஸ், லனூஸ், ஹரிஸ், இலக்கியன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இணுவில் காரைக்கால் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

