1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
காங்கேசு அருளானந்தம்
ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 814 ஜனவரி, 1938 – 22 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- கரணவாய் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரணவாய் கிழக்கு மணற்பாதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காங்கேசு அருளானந்தம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனால் என்ன
ஆயிரம் தான் கடந்து போனால் என்ன
அன்பான அப்பாவே உங்கள் மறைவால்- நாம்
வாடுவதை யார் எடுத்துரைப்பார்கள்..
ஒளிதரும் சூரியனாக
இருள் அகற்றும் சந்திரனாக
ஊர்போற்றும் நல்லவனாக
பார் போற்றும் வல்லவனாக
வாழ்வாங்கு வாழ்ந்து- எங்களை
வாழவைத்த தெய்வமே!!!!
நின் துணையின்றி நாம் தவிக்க
என்ன பாவம் செய்தோம் என்று
எம்மை தவிக்கவிட்டு சென்றீர்களோ?
மறந்திடுமோ நெஞ்சமது வாழ்நாளில்
ஓர்முறையேனும் உங்கள் திருமுகத்தை!!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டி வளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாணம் கரணவாய் கிழக்கில் 04/JAN/1938 இல் திரு.திருமதி காங்கேசு இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனாக அருளானந்தம் அவர்கள் சிவானந்தம், ஈஸ்வரானந்தம், கோகிலானந்தம், முருகானந்தம், விவேகானந்தன் போன்ற சகோதரங்களுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகள் சிவபாக்கியம் எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து இளங்கோ, இளஞ்செழியன், திருமாறன், வேந்தன், பாரதி எனும் அழகிய பிள்ளையைப் பெற்று வளர்த்து இரத்தினேஸ்வரி,நந்தினி,சாந்தி,சிவசுபாங்கினி,சத்தியகுமார் என்பவருக்கு திருமணம் முடித்து வைத்து அருள்மேனன், பிரவீன், அருங்கவி, ஆர்த்திகா, அபிராம், ஆரணி, விதுசன், கார்ணிகா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் படித்து நல்லநிலை அடைந்த இவர் ஆசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் அறிவும் நிறைந்தவராக விளங்கியதுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கிய இவர் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 22.08.2019 இல் 81 வயதில் பிரித்தானியாவில் உள்ள London நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.
அறிவு ஆசானே எங்கள் அன்பு அப்பாவே
தெளிவு எண்ணம் கொண்ட தென்றல் காற்றே
கனிவு மனமுடன் வாழ்ந்து எமை வளர்த்த
கருணை ஒளியே கலங்கி அழுகிறோம்
ஒருமுறை கண்திறந்து பாருங்களேன்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

