ஆறுதல்

மரண அறிவித்தல்

கண்மணி வாமதேவா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கண்மணி வாமதேவா

வயது 932 டிசம்பர், 1925 – 14 ஜூன், 2019

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கண்மணி வாமதேவா அவர்கள் 14-06-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுதுரை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நெல்லைநாதன், தையம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நெல்லைநாதன் வாமதேவா அவர்களின் அன்பு மனைவியும்,

அம்சதேவா, இன்பஜோதி, காலஞ்சென்ற ஜெயதேவா, சந்திரதேவா, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற பானுஸ்ரீநாததேவா, நிமலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகராஜா, புவனேஸ்வரி, உமாதேவி, சந்தனராஜா, ஷாமினி, ஜெகநாதன் ஆகியோரின் அன்பு மாமியும்,

பேரப்பிள்ளைகளின் பேத்தியும், பூட்டப்பிள்ளைகளின் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகு நிறைந்த இடமும்,அருகில் உள்ள பிரதேசமும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,நாச்சிமார் அம்மன் அருள்பாலிக்கும் இடமும் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த நாச்சிமார் கோவிலடியில் 02/DEC/1925 ஆம் ஆண்டில் திரு.திருமதி பொன்னுதுரை வள்ளியம்மை தம்பதிகளுக்கு அன்புப் புத்திரியாக கண்மணி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவரானதும் திரு. திருமதி.நெல்லைநாதன் தையம்மாள் தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான திரு.நெல்லைநாதன் வாமதேவா அவர்களைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து அம்சதேவா, இன்பஜோதி, ஜெயதேவா, சந்திரதேவா, இராஜேஸ்வரி, பானுஸ்ரீநாததேவா, நிமலா போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து பரமேஸ்வரி, சண்முகராஜா, புவனேஸ்வரி, உமாதேவி, சந்தனராஜா, ஷாமினி, ஜெகநாதன் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து பேரப்பிள்ளைகளுடனும்,பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

அத்துடன் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கினார். சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 14.06.2019 இல் 93 வயதில் பிரித்தானியாவில் உள்ள London நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

புன்னகை முகமே புது
வசந்தமே
வண்ண உருவே வள்ளல்
உறவே
கண்ணின் மணியாய் காத்த
உயிரே
எண்ணி அழவைத்தீர் எமை
ஏங்க வைத்தீரே

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.