31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா தனிப்புலிசிங்க முதலியார்
வயது 7029 செப்டம்பர், 1945 – 28 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தனிப்புலிசிங்க முதலியார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 25-02-2015 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் சாம்பலோடை அந்தியேட்டி மடத்திலும், வீட்டுக்கிருத்தியக் கிரியை 27-02-2016 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெற்றன.
எங்கள் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்து வழிகாட்டி சிவபதமடைந்த எமது அன்புத் தெய்வத்தின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும், மதியபோசன நிகழ்வும் 06-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிக்கு Gemeindesaal Poststrasse 13, 8552 Felben-Wellhausen, Switzerland என்னும் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்களும், குடும்பசகிதம் வருகை தந்து நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் வீட்டிற்கு உடன் வந்து எமக்கு உதவிகள் புரிந்து ஆறுதல் கூறிய உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அன்பு நெஞ்சங்களுக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரம் மூலம் துயர்பகிர்ந்தவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் உலகின் பல பாகங்களில் இருந்தும் தொலைபேசி மூலமாகவும்,சமூக வலைத் தளங்கள் ஊடாகவும் அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு அன்பர்களுக்கும், எமது அழைப்பை ஏற்று காரைநகரில் நடைபெற்ற அந்தியேட்டி, வீட்டுக்கிருத்தியக் கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும். எங்கள் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Hauptstrasse 3,
8552 Felben,
Wellhausen,
Switzerland.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

