ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தப்பு குமாரசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தப்பு குமாரசாமி

வயது 9124 டிசம்பர், 1927 – 2 ஜூன், 2019

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
மானிப்பாய், பிரித்தானியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு குமாரசாமி அவர்கள் 02-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு மரகதமொழி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விக்னேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

அசோக்குமார், விஜயகுமார், ஜெயந்தி, கலைவாணி, கருணாநிதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நாகேந்திரம், பொன்னம்மா, பார்வதி, சிவகாமிப்பிள்ளை மற்றும் நாகம்மா, வெற்றிவேல்(சட்டத்தரணி), காலஞ்சென்ற மருதையினார்(மருத்துவர்) ஆகியோரின் அன்புமிகு சகோதரரும்,

கோசலாதேவி, பிரபாலினி, மதியழகன், சிவனேசன், செலீஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சத்தியபாமா, குமாரசாமி, சபாபதிப்பிள்ளை, கனகசபை, பூபதி மற்றும், சிவசம்பு, மேரிபுஷ்பம், ஜெயபாலன், நந்தகோபாலன், காலஞ்சென்ற ஞானேஸ்வரி மற்றும் யோகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,

கெளதமன், சால்ஸ், நிலா, லக்‌ஷனா, லக்‌ஷ்மன், ஹரிஷ், செளமியன், கார்த்தியன், சிவானி, காறா, சிரேயா, கயூர் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,தீவுக்கூட்டங்களில் பெரிய தீவும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த நெடுந்தீவில் 24/DEC/1927 ஆம் ஆண்டில் கந்தப்பு மரகதமொழி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக குமாரசாமி அவர்கள் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் நாகேந்திரம், பொன்னம்மா, பார்வதி, சிவகாமிப்பிள்ளை, நாகம்மா, வெற்றிவேல், மருதையினார் போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் கந்தசாமி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகள் விக்னேஸ்வரி என்பவரைத் திருமணம் செய்து இன்பமாக வாழ்ந்து அசோக்குமார், விஜயகுமார், ஜெயந்தி, கலைவாணி, கருணாநிதி எனும் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்ததுடன், கோசலாதேவி, பிரபாலினி, மதியழகன், சிவனேசன், செலீஷா போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து கௌதமன், சால்ஸ், நிலா, லக்ஷனா, லக்ஷ்மன், ஹரிஷ், சௌமியன், கார்த்தியன், சிவானி, காறா, சிரேயா, கயூர் போன்ற பேரப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும்,இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் சகோதரபாசம் நிறைந்தும்,பிள்ளைப்பாசம் கொண்டும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 02.06.2019 இல் 91 வயதில் பிரித்தானியாவில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

நெடுந்தீவு மண்ணின்
........ நேர்மைக் குணமே
புன்னகை மனமே
.......புன் சிரிப்பே
மனதில் உறுதியுள்ள
........மாபெரும் சரித்திரமே
நெஞ்சம் முழுதும்
......நிலைத்த வள்ளலே

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.