ஆறுதல்

அகாலமரணம்

கந்தப்பு வரதராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தப்பு வரதராஜா

வயது 5510 மார்ச், 1964 – 18 ஜூன், 2019

பிறந்த இடம்
புலோலி தெற்கு
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு வரதராஜா அவர்கள் 18-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தப்பு, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், சிவராஜா பாலசரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாமினி அவர்களின் அன்புக் கணவரும்,

துவாரகா, சங்கீதா, கல்பனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பத்மலோசனி(கொழும்பு), சாந்தினி(பிரான்ஸ்), கமலாசனி(ஜேர்மனி), மன்னவன்(வட்டக்கச்சி), மங்களேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நவரத்தினராஜா, வைரவநாதன், காண்டீபன், மிருணாளினி, உதயகுமார், சிவகுமார், பாலரமணி, பாலராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வஜிரா, பத்மநாதன், தவாகரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ரமுனாகர், பிரியா, றோஜினி, ஹரிஜனா, லக்சிகா, கஜானன், சேயோன், தயான், மகிழினி, சிரான், பிறியன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அக்சயா, கலக்சிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

தாரணி, கார்த்திகா, நிவேதா, கீதா, தர்சன், செந்தூரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த புலோலி தெற்கில் 10/MAR/1964 இல் திரு.திருமதி கந்தப்பு சிவக்கொழுந்து தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக திரு.வரதராஜா அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் பத்மலோசனி, சாந்தினி, கமலாசனி, மன்னவன், மங்களேஸ்வரி போன்ற உடன்பிறப்புகளுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு திருமதி சிவராஜா பாலசரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகள் பாமினி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக துவாரகா, சங்கீதா, கல்பனா போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் ராதா என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் தன்னலமற்ற சமூக சேவையாளரும்,எல்லோர் நெஞ்சங்களிலும் அழியாத அன்பை விதைத்தவர். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார். இவ்வாறு மனைவி மற்றும் பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 18.06.2019 இல் 55 வயதில் பிரான்ஸ்ஸில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

புலோலி தந்த புது மலரே
பல காலம் பாசமாக உறவாடி
நிலையாக வாழ்ந்த நிஜ உறவே
வலையில் வீழ்ந்த மீன் போல்
மனம் துடிக்க பிரிந்தது ஏனோ

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.