நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி இராசலிங்கம்
வயது 7615 நவம்பர், 1942 – 18 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- சரவணை
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுக"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு "
எமது அன்புத் தெய்வம் இறையடி எய்திய செய்தி கேட்டு ஓடோடி வந்து துயரத்தில் பங்கு கொண்டு பல உதவிகள் புரிந்தோர்கள், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், இறுதி நிகழ்வில் அஞ்சலி செலுத்திய அன்பர்க்கும், உற்றார், உறவினர்க்கும், நண்பர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இறைத்தொண்டை தன் வாழ்நாள் கடமையாக கருதியவரும், உறவுகள் மீது மட்டற்ற பாசம் கொண்டவருமான கந்தசாமி இராசலிங்கம் அவர்களின் வாழ்க்கை வரலாறிது...
ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தின் அருகில் உள்ள தீவும் மக்கள் செறிந்து வாழும் பகுதியுமான சரவணையில் 15/NOV/1942 இல் கந்தசாமி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனாக இராசலிங்கம் அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் பிறந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
அன்பும் அழகும் நிறைந்த இவர் தியாகராசா, நிர்மலாதேவி எனும் உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும், நாகரெத்தினம் அன்னப்பூரணம் தம்பதிகளின் மகளான செல்வராணி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து சந்தோசமாக வாழ்ந்து திருவருட்செல்வி, கலைச்செல்வி, செந்தமிழ்செல்வி எனும் அழகிய பிள்ளையைப் பெற்று வளர்த்து குமாரதேவன், ரமணன், வித்தியரூபன் போன்ற நல்ல வாழ்க்கை துணைகளைத் திருமணம் முடித்து வைத்து கணதீபன், விகாஷ், கரிஷ், விதுஷா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரான இவர், திருக்கோயில்களுக்கு தொண்டாற்றுவதை தன் வாழ்நாள் பணியான எண்ணி செய்தவர். மேலும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவரான இவர், தினசரி நாளிதழ்களை படிப்பதை தனது பொழுதுபோக்காகக் கொண்டவர்.
உதவி என்று வந்தோர்க்கு அவர் வேண்டியதை வழங்கிய வள்ளலான இவர், தனது உறவுகளைத் தவிக்கவிட்டுவிட்டு 18.09.2019 இல் 76 வயதில் யாழ்ப்பாணத்தில் இறையடி எய்தினார்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

