நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி சாந்தகுமார்
வயது 561 ஏப்ரல், 1963 – 8 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- இடைக்காடு
- வாழ்ந்த இடம்
- Clarens
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎம் குலத்தின் விருட்சமாகி
அன்புக்கு இலக்கணமாய்
பாசத்தின் உறைவிடமாய்
எம்முடன் வாழ்ந்து
எம்மை எல்லாம் ஆறாத்துயரில்
ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்ட எமது தெய்வமே!
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திகின்றோம்.
அன்னாரின் மறைவுச் செய்தி அறிந்தவுடன் உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் உடனடியாக எம்மில்லம் நாடி ஓடி வந்து வேண்டிய உதவிகள் செய்த உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள் ஆகியோருக்கும், துக்கம் விசாரித்தவர்களுக்கும், வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் இருந்து தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும், மரணச்சடங்கு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், மலர்வளையங்கள் வைத்து சாந்தி அஞ்சலி செலுத்தியவர்கள் இன்னும் ஏனைய நெஞ்சங்கட்கும் எமது இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
அன்பாக பழகுபவரும், வாழ்க்கையில் உழைத்து சாதித்தவருமான கந்தசாமி சாந்தகுமார் அவர்களின் வாழ்க்கை வரலாறிது...
யாழப்பாணம் அச்சுவேலி இடைக்காடு பெருமளவில் கந்தசாமி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனாக சாந்தகுமார் அவர்கள் 01/APR/1963 இல் பிறந்தார். சறோயினி, சத்தியமூர்த்தி, சாந்தரூபி எனும் தனது அன்பு உடன்பிறப்புகளோடு ஓடி ஆடி வளர்ந்த இவர், பள்ளிக் கல்வியை மட்டும் பயின்றவர்.
முழுக் கதையையும் வாசிக்க
பின்னர் தம் குடும்பத்தின் பாரம்பரிய தொழிலான விவசாயத்தை செய்யத் தொடங்கிய இவர், சிறிது வளர்ந்து பெரியவரானதும் குடும்ப சூழ்நிலை காரணமாக 1990 ஆம் ஆண்டு தைவான் நாட்டிற்கும், 1991 இல் சுவிஸிற்கும் உணவக பணியாளராக வேலைக்குச் சென்றார்.
திருமண வயதை எட்டியதும் பெற்றோர் நிச்சயத்தபடி 1998 ஆம் ஆண்டு இராசையா ஞானபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளான ஞானரதி அவர்களைத் திருமணம் முடித்தார். இல்லற வாழ்வை இனிமையாக வாழ்ந்ததன் பயனாக சரணிதன், சாரங்கன், தருணிகா எனும் அன்பு செல்வங்களை பெற்று வளர்த்தார்.
சாந்தி என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டதுடன், எப்போதும் சுருசுருப்பாக செயல்படும் சுபாவம் கொண்டவரான இவர், தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை சரியாக செய்து முடிப்பதில் முனைப்போடு இருந்தார். தனக்கு ஒரு துன்பம் நேர்ந்தாலும் அதை யாரிடமும் காட்டிக்கொள்ளாமல் இருக்கும் உயர்ந்த மனம் கொண்டவராக விளங்கினார்.
வீட்டில் மீன் வளர்ப்பதை தனது பொழுதுபோக்காக கொண்டிருந்ததுடன், இலங்கை சென்று மீண்டும் வாழ வேண்டும் என்பதை அடிக்கடி தனது குடும்பத்தாரிடம் கூறி வந்தார்.
கடந்த ஒரு வருடமாக நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டு வந்த இவர், தனது பாசத்திற்குரிய அனைவரையும் விட்டு 08.10.2019 இல் தனது 56 வயதில் சுவிஸில் காலமானார்.
அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

