ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தசாமித்துரை தாமோதரம்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தசாமித்துரை தாமோதரம்பிள்ளை

வேம்படி சயிக்கிள்கடை முன்னாள் உரிமையாளர்- வல்வெட்டித்துறை

வயது 916 ஆகஸ்ட், 1927 – 18 மே, 2019

பிறந்த இடம்
வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
Montreal

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமித்துரை தாமோதரம்பிள்ளை அவர்கள் 18-05-2019 சனிக்கிழமை அன்று Montreal இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை றோகினிஅம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பாக்கியலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவலோகநாதன்(நாதன்- Montreal), செல்வநாதன்(செல்வம்- Toronto), புஸ்பராணி(ஜேர்மனி), பத்மநாதன்(பற்பன்- லண்டன்), ஜெயராணி(Montreal), காலஞ்சென்றவர்களான அமுதராணி, தனராணி, கமலராணி, விமலராணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுமதி(Montreal), சுகுணா(Toronto), சின்னத்துரை(லிங்கம்- ஜேர்மனி), அம்மனா(லண்டன்), ஜெயகுலசிங்கம்(சிங்கம்- Montreal), ராசமூர்த்தி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னராணி, சரஸ்வதி, மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும், வேலும்மயிலும்(சிவபெருமான்), திருஞானமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோபிகா, கோகிலா, சங்கவி, ரம்மியன், பிரசன்னா, அன்பழகன், கெளதமி, தீபன், றென்சிகா, மணாளன், தனுசிகா, பிரகாஷ், லட்சுமி, கார்த்திகா, காலஞ்சென்ற பார்கவி ஆகியோரின் அன்புப் பேரனும்,

மீலா, அலிசா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன்,இந்தியாவிற்கு கப்பல் வாணிபம் செய்த இடமும், கடலுணவு, புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த வல்வெட்டித்துறையில் தாமோதரம்பிள்ளை றோகினியம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக கந்தசாமித்துரை அவர்கள் 06/AUG/1927 இல் அழகு நிறைந்த இவ் இடத்தில் அன்னராணி, சரஸ்வதி, மகாலட்சுமி போன்ற உடன் பிறப்புகளுடன் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் மாணிக்கவாசகம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகள் பாக்கியலட்சுமி அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து சிவலோகநாதன், செல்வநாதன், புஸ்பராணி, பத்மநாதன், ஜெயராணி, அமுதராணி, தனராணி, கமலராணி, விமலராணி ஆகிய அற்புத பிள்ளைகளை ஈன்றெடுத்து பாதுகாத்து வளர்த்ததுடன், மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் வல்வெட்டித்துறை வேம்படி சைக்கிள்கடை உரிமையாளராக செயற்பட்டதுடன், கடினப்பட்டு உழைத்ததுடன், எப்போதும் புன்னகை முகத்துடன்,நகைச்சுவையாக பேசும் குணம் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 18.05.2019 இல் 91 வயதில் கனடாவில் உள்ள Montreal நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

இன்முகம் காட்டும்
......இனிமை உள்ளமே
மக்கள் சேவையாக
.......மகிழ்ந்து உருகி
பாசம் காட்டி
.......பக்குவம் பாத்து
உதவும் உள்ளமே
.......உயர்ந்தீர் மனதில்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.