2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தவனம் கனகையா
வயது 7416 அக்டோபர், 1933 – 17 மே, 2008
- பிறந்த இடம்
- புதுக்குடியிருப்பு
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபுதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தவனம் கனகையா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற கந்தவனம், நாகம்மமா தம்பதிகளின் அன்பு மகனும்,
செல்லம்மாவின் அன்புக் கணவரும் ஆவார்..
ஈராண்டு சென்றதையா இன்றும்
உங்கள் நினைவுகள் எங்கள்
நெஞ்சைவிட்டு நீங்கவில்லை
ஐயா, ஐயா, ஐயா, என
பாசமாய் அழைக்க
இன்று நீங்கள்
எம்முடன் இல்லை ஐயா
கண்ணீர் கொட்டுகிறது
வேதனை முடியுதேயில்லை
பாசமலரே உங்கள் உறவுகளை
தவிக்க வி்ட்டுச்சென்றதெங்கே?
எம்மை எல்லாம் நல்வழிகாட்டி
வாழ்வைத்து தெய்வமாய் திகழ்ந்த
எங்களய்யா இனி உங்கள்
திரு முகத்தை எங்கு காண்போமய்யா!
ஈராண்டு அல்ல
ஈராயிரம் ஆண்டு சென்றாலும்
எம் நெஞ்சைவிட்டு நீங்காத
ஒளிவிளக்கு நீங்களய்யா
உங்களின் ஆத்மசாந்தியை வேண்டிநிற்கும்
என்றும் உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
அன்னாரின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் 25.05.2010 செவ்வாய்க்கிழமை அன்று தற்காலிக வதிவிடமாகிய அபிஷா தனியார் வைத்தியசாலை கல்குழி 24 A வவுனியாவில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

