மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தவனம் இராசரத்தினம்
அரச சுகாதார திணைக்களம்- இலங்கை, பிரதம லிகிதர்
வயது 8930 செப்டம்பர், 1929 – 19 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தவனம் இராசரத்தினம் அவர்கள் 19-04-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தவனம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இராமலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
வரேந்திரன், பவானி, சிவேந்திரன், நிலானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ஐயாதுரை, பாக்கியம், இராசதுரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மலிங்கம் பூமலர், மார்க்கண்டு, சிவராஜா குணவதி, கெளசல்யாதேவி, அருளாநந்தவடிவேல் அன்னராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவதாசன், சுமதி, சுதர்சினி, உதயசங்கர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விமலாம்பிகை, நிமலாம்பிகை, கமலாம்பிகை, சிவனேஸ்வரி, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
வதனி, கஜேந்திரன், பகீரதா, அபிராமி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
திவாகரன், தர்சினி, துவாகரன், பகீரதி ஆகியோரின் அன்பு மாமாவும்,
வினிதா, நிலக்ஷன், பாகேசன், தினேசன், ஹரிசன், லக்ஷனா, வருணன், கிருஷ்ணி, ரேயாஸ்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும், நெல்வயல்கள், பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள், மிளகாய் வெங்காய வயல்கள், வாழைத் தோட்டங்கள் என அழகு நிறைந்த உடுப்பிட்டியில் 30-09-1929 இல் கந்தவனம் தங்கம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் இராசரத்தினம் அவர்கள் ஐயாதுரை ,பாக்கியம், இராசதுரை ஆகிய உடன் பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார். மேலும் செல்லத்துரை என அன்பாக அழைக்கப்படுவதனுடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் திருமணம் முடித்து வைக்க எண்ணிய பெற்றோர் இராமலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அழகுப் பெண்ணான நாகேஸ்வரி அவர்களை திருமணம் முடித்து வைத்தனர்.
இவர்கள் இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வரேந்திரன், பவானி, சிவேந்திரன், நிலானி எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்றெடுத்து பாசமாகவும் பண்பாகவும் பாதுகாத்து வளர்த்தனர். இவர் கடின உழைப்பாளியாக திகழ்ந்தார், அதாவது இலங்கை அரச சுகாதாரத் திணைக்களத்தில் பிரதம லிகிதராக சேவை செய்ததுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார்.
முழுக் கதையையும் வாசிக்க
குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கியதுடன் உடுப்பிட்டி விஸ்வகுல முருகன் ஆலயத்தில் அதீத பக்தி கொண்டதுடன் அதன் வளர்ச்சிக்காக உழைத்தவரும் ஆவார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 19.04.2019 இல் 89 வயதில் கனடா வில் உள்ள Markham நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
"அழகிய தோற்றம்
.....அன்பு உள்ளம்
உடுப்பிட்டி மைந்தன்
.....உத்தம மனிதன்
புன் முறுகல்
....புயல் பார்வை
பூ முகம் காண
... தவிக்கும் உள்ளங்கள் பல"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

