மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கார்த்திகேயன் ஆனந்தசிவம்
ஓய்வுபெற்ற விமான நிலைய முகாமையாளர்
வயது 7521 நவம்பர், 1943 – 3 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- நீர்கொழும்பு
- வாழ்ந்த இடம்
- கோண்டாவில், நீர்கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவிலைப் பூர்வீகமாகவும், நீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேயன் ஆனந்தசிவம் அவர்கள் 03-04-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேயன், பாக்கியம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற நடராஜா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயபவாணி(அண்ணி அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜன் பாபு(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), அனுஷா ராணி(விமானநிலையம்- கட்டுநாயக்கா), விஜிதாராணி(கணக்காளர்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கெளரி, மணிமேகலை, காலஞ்சென்ற ஆனந்தவேல், சத்தியவாணி, காலஞ்சென்ற தேவகுஞ்சரி, இந்திராணி, மிதிலைப்பெண், தேவிசாரதாமணி, தேவமனோகரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வேல்சாமி, பொன்னம்பலம், ஹேமகுமார், காலஞ்சென்ற ஸ்காந்தராஜா, யோகராஜா, ஸ்ரீதரன், சத்தியசீலன், மகாலிங்கம், ஜெகநாதன், ஜெயமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இரத்தினராஜா, சறோஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அலங்ருதா, கோபித்(வைத்திய அதிகாரி, நீர்கொழும்பு வைத்தியசாலை), வினோதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிஷித், நிக்சித், அக்ஷயா, அஞ்சனா, ஹரிஸ், சனோஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 06-04-2019 சனிக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:30 மணியளவில் நீர்கொழும்பு மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகு இடமும், கோவில்கள் சூழ்ந்த அழகிய சோலையாகவும், பயன்தருமரங்கள், மரக்கறி தோட்டமும், படித்த சமுதாயத்தைக் கொண்டதுமான கோண்டாவிலில் 21-11-1943 இல் திரு. திருமதி கார்த்திகேயன் தம்பதிகளுக்கு அருமைப் புத்திரனாக ஆனந்தசிவம் அவர்கள் அவதரித்தார்.
சிறுவயதில் குறும்புகள் செய்து குதூகலித்து வாழ்ந்தார். இவர் வளர்ந்து பெரியவரானதும் ஜெயபவானி என்பவரை திருமணம் முடித்து சந்தோஷமாகவும் அன்பாகவும் வாழ்ந்து ராஜன்பாபு, விஜிதாராணி, அனுஷாராணி ஆகிய அழகிய பிள்ளைகளைப் பெற்றெடுத்து அவர்களுடன் அன்பாக வாழ்ந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் படித்து உயர் நிலை அடைந்ததுடன் நற்பண்பும், கருணைக் குணமும் கொண்டவராக இருந்ததுடன் விமான நிலையத்தில் முகாமையாளராக கடமை ஆற்றியதுடன் ஓய்வுநிலை பெற்றவர். இவ்வாறு மனைவி, பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 03.04.2019 இல் 75 வயதில் நீர்கொழும்பில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"அன்புள்ள தந்தையே
......அழகிய உறவே
அன்னையில் பாதியே
......அன்பின் சிகரமே
ஆண்டவன் உமை
.....அழைத்தது ஏனோ
ஆதரவற்று
......தவிக்கிறோம் நாம் "
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

