ஆறுதல்

நன்றி நவிலல்

காசியம்மா தம்பிராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

காசியம்மா தம்பிராஜா

ஓய்வுபெற்ற ஆசிரியை- Carmel Fatima College

வயது 8613 ஜூன், 1933 – 28 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
கல்முனை
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும், எழுச்சி கொண்ட மக்களாக விளங்கும் அம்பாறை கல்முனையில் 13/JUN/1933 இல் திரு.திருமதி முத்துக்குமார் ராசம்மா தம்பதிகளின் அருமை மகளாய் காசியம்மா அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் ஜெயமலர் எனும் உடன்பிறப்புடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி கிருஷ்ணபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும் உப அதிபருமான திரு.தம்பிராஜா என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக நாகேந்திரா, வசந்தி, உஷா எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று பாதுகாத்து வளர்த்து சபாநாதன், ஜெயபாலன் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து ஷிறோமி, ஷிவாணி, ரூபன், காயத்திரி, ஹிமான்சு, ஹரிஷாந் எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் சோதி ரீச்சர் என்று அன்பாக அழைக்கப்படும் இவர் Carmel Fatima College ஆசிரியையாக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், பழைய கதைகள் சொல்வதில் வல்லவராகவும், அன்பு பாசம் நிறைந்து கானப்படும் அழகிய உறவாக விளங்கியதுடன். அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு வாழ்ந்தார்.

இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 28.08.2019 இல் 86 வயதில் பிரித்தானியாவில் உள்ள London நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

எப்போதும் புன்னகை முகமுடன்
புதுமலர் போல் சிரித்திடும்
கருனை உறவே கலங்கி அழுகிறோம்
வருக ஒருமுறை தருக இன்பத்தை
எழுக எம் பாச அம்மாவே.

பிற அறிவித்தல்கள்

  1. 29 ஆகஸ்ட், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.