மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரித்தம்பி நடராசா
Retired Civil Engineer- Dept of Public Works(Buildings), Colombo
வயது 9015 ஜூன், 1929 – 10 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- அராலி
- வாழ்ந்த இடம்
- ஊரெழு, கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அராலியை பிறப்பிடமாகவும், ஊரெழு கிழக்கு, கொழும்பு, Daresalam Tanzania, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி நடராசா அவர்கள்10-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் ஏக புத்திரரும், நாகலிங்கம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி, ராஜ்மோகன், தேவகி, கமல்ராஜ்(கண்ணன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கதிர்காமநாதன், குகநாதன், காலஞ்சென்ற ஜெகநாதன், இந்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Dr. கணேசராஜா, அருளினி, சுசீந்திரன், கிரிஷாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜலனி- நிருபன், ஷயன், டிரேன், அஷேன், அஸ்வின், மிலானி, மிலான், கனீஸ், கஸ்னி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அராலியில் 15/JUN/1929 இல் செல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனாக கதிரித்தம்பி நடராசா அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும், திரு.திருமதி நாகலிங்கம் கண்மணி தம்பதிகளின் அருமை மகள் கமலாதேவி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து சந்தோசமாக வாழ்ந்து வாசுகி, ராஜ்மோகன், தேவகி, கமல்ராஜ் எனும் அழகிய பிள்ளையைப் பெற்று வளர்த்து Dr.கணேசராஜா, அருளினி, சசீந்திரன், கிரிஷாந்தி போன்றோருக்கு திருமணம் முடித்து வைத்து ஜலனி-நிருபன், ஷயன், டிரேன், அஷேன், அஸ்வின், மிலானி, மிலான், கனீஸ், கஸ்னி எனும் பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் நன்கு படித்த இவர் சிவில் இன்ஜினியரான இவர் கொழும்பில் dept of public works (Buildings) ஆக சேவையாற்றி ஓய்வு பெற்றது மட்டுமல்லாது நுண்ணறிவுத் திறன் கூடியவராகவும், நண்பர்களுடன் தொலைபேசியில் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும் விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 10.09.2019 இல் 90 வயதில் கனடாவில் உள்ள Toronto நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
கண்ணாடி வதனமே கதிர் வீசும் பார்வையே
எதிர்ப்பேரை சாந்தமாக்கி - எங்கள்
விதி வெண்ற வீரனேக
தியற்ற எம்மை கரங்கொண்டு காத்த
மதிநுட்ப வீரனே மங்காப் புகழோனே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

