1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரவேலு கந்தசாமி
வயது 8719 பிப்ரவரி, 1930 – 6 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- மல்லாகம்
- வாழ்ந்த இடம்
- மல்லாகம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு கடந்ததுவோ? ஐயா
பல காலங்கள் எங்களை பாசத்துடனும் நேசத்துடனும்
வளர்த்து ஆளாக்கி பரிவுடன் பாலர் பாடம் கற்பித்து
நல்ல வழி காட்டி காவலாய் எமக்கிருந்து கல்யாணம்
கட்டிவைத்து பேரன், பேத்திகளை அள்ளி அணைத்து
பூட்டன், பூட்டிகளை கண்ணாரக் கண்டு மகிழ்வுற்று
வாழ்ந்த காலங்களில் காலச் சுழற்சியினால் காலதேவன்
அழைத்தவுடன் காணாமல் போனதேனோ!
ஐயா நீங்கள் சென்றுவிட்டீர்கள் ஆனால் உங்கள் முகம்
எங்கள் கண்முன் நீங்காமல் வந்து போகின்றது
நீங்களும், அம்மாவும் இல்லற வாழ்வுக்கு ஓர் உதாரணமாக
வாழ்ந்தீர்கள் எவ்வளவு காலம் வாழ்ந்தீர்கள் அன்று இல்லாமல்
எப்படி வாழ்ந்தீர்கள் என்பதற்கு ஒரு உதாரணமாக
வாழ்ந்துவிட்டு இன்று உங்கள் துணை இங்கு
துணை இன்றி தனிமரமாக தவிக்கவிட்டு
நீண்ட தூரம் சென்றதேனோ?
இனி நாங்கள் என்று காண்போமோ?
இன்னொரு ஜென்மம் இருந்தால்
அதிலும் நீங்களே எங்கள் வீட்டின் ஆலமரமாகவும்
அதில் நாங்கள் விழுதுகளாகவும் வர
சந்நிதி முருகனை வேண்டி
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்து நிற்கும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

