31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரவேலு சிவகுமார்
வயது 499 நவம்பர், 1968 – 6 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- ஊர்காவற்துறை
- வாழ்ந்த இடம்
- Pontault-Combault
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்துறை தம்பாட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pontault Combault ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு சிவகுமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!
அன்று எங்களது துன்பம் நீக்க
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!
கருணையின் வடிவமே பண்பின் சிகரமே
உனது அன்பாலும் அரவணைப்பாலும்
உனது நித்திய சிரிப்பாலும் அடுத்தவர்களிற்கு கூறும்
ஆறுதல் வார்த்தைகளாலும் அனைவரையும் கவர்ந்தீரே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 06-10-2018 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 21-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை 2 Rue de l'Orme au Charron 77340 Pontault-Combault France எனும் இடத்தில் உள்ள மண்டபத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.
வீட்டுமுகவரி:
No.6 Rue de l'Orme au Charron,
77340 Pontault-Combault,
France.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

