ஆறுதல்

மரண அறிவித்தல்

கதிரவேலு ஸ்ரீநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கதிரவேலு ஸ்ரீநாதன்

முன்னாள் யாழ் வர்த்தகர்- (நாதன் ரெக்ஸ்) New Market

வயது 6619 மே, 1953 – 9 மே, 2020

பிறந்த இடம்
வேலணை மேற்கு
வாழ்ந்த இடம்
வேலணை மேற்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு ஸ்ரீநாதன் அவர்களின் 09-05-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, சொர்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், ஞானசிவம் காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானதீபம் அவர்களின் அன்புக் கணவரும்,

சசிதர்(கனடா), ஸ்ரீதரன்(கொழும்பு), சர்மிளா(கனடா), சுதாகர்(ஜேர்மனி), சிவதாஸ்(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தவரத்தினம், தனவதி, செல்வராணி, செல்வராசா, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுஜாதா(கனடா), காயத்திரி(இலங்கை), காந்தரூபன்(கனடா), சிந்துஜா(ஜேர்மனி), தர்சிகா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷாயினி, ஷாளினி, ஷாய்னா, அஸ்னவிகா, காவியா, சிறினிகா, கனிசா, கனிசன், ஆருசா ஆகியோரின் அன்புப் பேரனும்,

கோபாலபிள்ளை, குலசேகரம் பிள்ளை, கிஸ்ணமூர்த்தி, பத்மாவதி, ராஜசிங்கம், ஞானசேகரம், சிவன்ஞானசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-05-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணை அம்பலவி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 8 ஜூன், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.