மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரவேலு தம்பையா
பலகத்தறை ஸ்ரீ முருகன் தேவஸ்தான பூசகர்
வயது 7214 மார்ச், 1943 – 12 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- பொன்னகர்
- வாழ்ந்த இடம்
- பொன்னகர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பூநகரி நல்லூர் முக்கொம்பனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு தம்பையா அவர்கள் 12-12-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற வினாசித்தம்பி, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவசொருபி, விஜயசொருபன், காலஞ்சென்ற உதயசொருபன், தயாசொருபி, சாந்தசொருபி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, லக்ஷ்சுமி, சறோஜினிதேவி, மற்றும் செல்லம்மா, குட்டியம்மா, நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மநாதன், மேகலா(சுகாதார உத்தியோகத்தர்- பூநகரி), அம்பிகா, தேவதாஸ், சிவநேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தர்சன், வினோஜன், டிலக்சனா, டிலானி, சோபாஜினி, திருநிலவன், திருமகள், தனுசியா, துளசிகா, அற்புதன், உமாதுஷன், வருணன், அபிராமி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

