ஆறுதல்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு2 ஜனவரி, 1952
இறப்பு28 ஜூன், 2019
கதிரவேலு வயிரவப்பிள்ளை அவர்களின் படம்

கதிரவேலு வயிரவப்பிள்ளை

வயது 67

பிறந்த இடம்
கீரிமலை
வாழ்ந்த இடம்
உரும்பிராய்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கீரிமலை கூவிலைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மேற்கு அம்மன் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு வயிரவப்பிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அன்பு தெய்வமே!
மூன்று ஆண்டு கடந்தும்
ஓயவில்லை உம் உயிருள்ள நினைவுகள்
அன்பாய் கதைக் கூறி
அழுத்தமாய் அரவணைத்து
அனுபவத்தை அறிவுரையாக்கி
எமதுவாழ்வின் வழிகாட்டியானீர்!

குருதியை வியர்வையாக்கி
கடமையை போர்வையாக்கி
விழுதாயிருந்து கழுகாய் காத்தீரே!

சொல்லாமல் பிரிந்ததேனோ
திரும்ப முடியாப் பாதையிலே!
நெடுவழிப் பயணம் செய்த நீர்
பயணிக்க முடியவில்லையென
பாதியிலேயே சென்றுவிட்டீரோ!

இம் மண்ணை விட்டு இல்லை
பயணம் முடிவுப்பெற்றதென
சென்று விட்டீரோ
விண்ணிற்கு கண்களில்
நீர் சூழ கலங்கி நிற்கின்றோம்
உம்நிழற்படம் முன்னே...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்...

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 29 ஜூன், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.