நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரேசன் சுதாகரன்
வயது 469 ஜூலை, 1973 – 3 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- அம்பாறை
- வாழ்ந்த இடம்
- Munchen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு பல்வேறு வெளிநாடுகளிலிருந்தும் நேரிலும், தொலைபேசி, மற்றும் இணையத்தளவாயிலாகவும் தொடர்பு கொண்டு துயரை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்து கொண்டவர்களுக்கும், மற்றும் பல வழிகளிலும் உதவி புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் வர்த்தக ஸ்தாபனங்கள், பொது அமைப்புக்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் சேர்ந்து வாழும் அம்பாறையின் மத்திய முகாமில் 09/Jul/1973 இல் திரு.திருமதி கதிரேசன் பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மகனாக திரு.சுதாகரன் அவர்கள் இவ் அழகு நிறைந்த நாட்டில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் கலாகரன், யாழினி, திவாகரன், ஜெகதீசன் போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி பாலகிருஸ்னன் மதுரம் தம்பதிகளின் அன்பு மகள் கிருஸ்ணசாந்தி(கிஷா) எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து அஸ்விகா, அஸ்வின் எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் சுதா என்ன அனைவராலும் விரும்பி அழைக்கப்படும் இவர் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இவ்வாறு மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 03.08.2019 இல் 46 வயதில் ஜேர்மனியில் உள்ள Munchen நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
தென்தமிழர் தென்றலே
தண்தளிர் அரும்பே
நின் மனம் கரும்பே
வண்மதி அழகை விரும்பி
என்மனம் ஆவலால் தழும்பி
இன்பங்கள் கோடி கொட்டி
கண்ணென காத்து பிரிந்தீரே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

