ஆறுதல்

மரண அறிவித்தல்

கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா

வயது 798 ஜூலை, 1940 – 17 ஜூலை, 2019

பிறந்த இடம்
இளவாலை பெரியவிளான்
வாழ்ந்த இடம்
இளவாலை பெரியவிளான், முல்லைத்தீவு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இளவாலை பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், பெரியவிளான், முல்லைத்தீவு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா அவர்கள் 17-07-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுவாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி அருளானந்தம் தம்பு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான அருளம்மா, அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கீதபொன்கலன் பொன்ராசா அவர்களின் அன்பு மனைவியும்,

திறினீற்ரி நிர்மலா(நோர்வே), தியோப்பிளஸ் நேசன்(கனடா), அருட்சகோதரி றதினி(திருக்குடும்ப கன்னியர்மடம்- யாழ்ப்பாணம்), ஆன்றதி(சுவிஸ்), டெனற்(கனடா), யஸ்ரின்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திருமேனி, டொறின், சுதாகரன், தனுஜா, வினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றொக்சிக்கா, கிருபா, றுபேஸ், நீல், ஜேசன், கவின், ஆகாஷ், சாஷா, செறினா, யூலியான ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் இளவாலை பெரியவிளானில் 08/JUL/1940 இல் திரு.திருமதி சுவாம்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளாய் திரேசம்மா அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி அருளானந்தம் தம்பு தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான கீதபொன்கலன் பொன்ராசா என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக திறினீற்ரி நிர்மலா, தியோப்பிளஸ் நேசன், அருட்சகோதரி றதினி, ஆன்றதி, டெனற், யஸ்ரின் போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து திருமேனி, டெறின், சுதாகரன், தனுஜா, வினி என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து றொக்சிக்கா, கிருபா, றுபேஸ், நீல், ஜேசன், கவின், ஆகாஷ், சாஷா, செறினா, யூலியான போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கியதுடன் சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார் இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார்,உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 17.07.2019 இல் 79 வயதில் கனடாவில் உள்ள Mississauga நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

இளவாலை மண்ணின்
இளகிய உள்ளமே
வளமாக வாழ்ந்த
வைர மனமே
அழகான உறவே
அன்பாக வாழ்ந்து
விழுந்தீரே மண்ணில்
விழிநீர் சொரிய

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.